CSK vs RR : தோனிக்கு எதிராக நான் கடைசி ஓவரில் வச்சிருந்த பிளானே இதுதான் – சந்தீப் சர்மா பேட்டி

Sandeep-Sharma
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான 17-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது மூன்று ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதோடு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜஸ்தான் அணி சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றுள்ளது அந்த அணியின் நிர்வாகத்தினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Dhoni

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது. பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது ஒரு கட்டத்தில் சிவம் துபே ஆட்டமிழக்கும் வரை நல்ல நிலையில் இருந்தது.

11 ஓவர்களில் 90 ரன்கள் கடந்திருந்த சென்னை அணியானது அதன் பிறகு மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே இறுதி நேரத்தில் வெற்றியை நோக்கி கடினமான போராட்டத்தை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வேளையில் ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் ஏழாவது விக்கெட்க்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தாலும் இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்ததால் 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது.

Sandeep Sharma 1

இந்த போட்டியின் கடைசி இரண்டு ஓவர்களில் 40 ரன்கள் தேவை என்கிற நிலையில் கடைசியில் தோனி மற்றும் ஜடேஜா ஆகியோர் இணைந்து 36 ரன்களை சேர்த்து இருந்தனர். சென்னை அணி இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் அவர்களது போராட்டம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து கடைசி ஓவர் வீசிய சந்தீப் சர்மா தோனிக்கு எதிராக எவ்வாறு பந்துவீச திட்டமிட்டு இருந்தேன் என்பது குறித்த தகவலை வெளியிட்டார். அதன்படி அவர் கூறுகையில் : கடைசி ஓவரின் போது நான் யார்க்கர் பந்துகளை வீச விரும்பினேன். வலைப்பயிற்சியின் போது அதிகம் யார்க்கர் பந்துகளை சரியாக வீசியதால் அதுதான் தோனிக்கு எதிராக நல்ல ஆப்ஷன் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : CSK vs RR : இதெல்லாம் நான் எடுத்த முடிவு இல்ல. டீம் மேனேஜ்மென்ட் எனக்கு கொடுத்த ரோல் – ஆட்டநாயகன் அஷ்வின் பேட்டி

ஆனாலும் இரண்டு பந்துகளை நான் யார்க்கர் வீச நினைத்து லோ புல்டாஸ் ஆக வீசிவிட்டேன். அந்த பந்துகளை தோனி சிக்ஸருக்கும் அடித்து விட்டார். அதன் பிறகு சரியான லென்த்தில் அவருக்கு எதிராக நல்ல ஆங்கிலில் பந்து வீசியதால் அவரை கட்டுப்படுத்தி வெற்றியும் பெற முடிந்தது என சந்தீப் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement