CSK vs RR : இதெல்லாம் நான் எடுத்த முடிவு இல்ல. டீம் மேனேஜ்மென்ட் எனக்கு கொடுத்த ரோல் – ஆட்டநாயகன் அஷ்வின் பேட்டி

Ashwin
- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் 17-ஆவது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இன்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது துவக்கத்திலேயே ஜெய்ஷ்வால் விக்கெட்டை இழந்தாலும் இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த படிக்கல் மற்றும் பட்லர் ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 ஆவது விக்கெட்டிற்கு 77 ரன்களை பாட்னர்ஷிப் அமைத்தனர்.

Dhoni

- Advertisement -

பின்னர் போட்டியின் ஒன்பதாவது ஓவரில் அடுத்தடுத்து படிக்கல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்கவே 5 ஆவது வீரராக களம்புகுந்த அஷ்வின் மிகச் சிறப்பாக விளையாடி 30 ரன்களை குவித்தார். இறுதியில் பட்லர் 52 ரன்களும், ஹெட்மயர் 30 ரன்கள் என அதிரடி காட்ட ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் குவித்தது. பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 172 ரன்களை குவித்தது.

இதன் காரணமாக மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங்கில் 30 ரன்கள் குவித்த அஷ்வின் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 25 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றியதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய அஸ்வின் கூறியதாவது :

Ashwin 1

நான் எப்போதெல்லாம் பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் நானே முடிவெடுத்து களமிறங்குகிறேன் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது. அணியின் நிர்வாகம் எனக்கு வழங்கும் ரோல் இதுதான். நாங்கள் அடுத்தடுத்து படிக்கல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை இழந்ததும் மிடில் ஓவரில் விளையாட வேண்டும் என்பதனாலே நான் களமிறங்கினேன்.

- Advertisement -

எப்பொழுதுமே என்னுடைய பேட்டிங் என்பது ஒருசில பந்துகளை எடுத்துக் கொண்டு அதன் பிறகு சிறப்பாக விளையாட முயற்சிப்பேன். அந்த வகையில் இந்த போட்டியிலும் நான் ஆரம்பத்தில் இருந்தே பேட்டிங் செய்ய காத்திருந்தேன். சென்னை மைதானத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதானது கிடையாது. ஆனாலும் நான் டெஸ்ட் போட்டிகளில் நல்ல பேட்டிங் பார்மில் இருந்து வருவதால் இந்த மைதானத்தில் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது.

இதையும் படிங்க : CSK vs RR : வெற்றி பெற்ற பிறகும் எதிரணி கேப்டன் எம்.எஸ் தோனியை புகழ்ந்த சஞ்சு சாம்சன் – பேசியது என்ன?

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நான் என்னுடைய பேட்டிங்கில் பயிற்சி எடுத்து வருகிறேன். முன்பு முடியாத ஒன்று தற்போது என்னால் பேட்டிங்கில் முடிகிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சி தான். வெற்றியோ தோல்வியோ என்னுடைய பங்களிப்பை நான் எனது அணிக்காக வழங்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய நினைப்பாக இருக்கிறது என அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement