தோனி ஒன்னும் ஒற்றை ஆளா 2011 உ.கோ ஜெய்க்கல.. கம்பீர் போலவே ஓப்பனாக விமர்சித்த ஏபிடி – இவருமா இப்படி பேசுறாரு

AB De Villiers gautam Gambhir
- Advertisement -

ஐசிசி நடத்தும் 2023 உலகக் கோப்பை 12 வருடங்கள் கழித்து இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தின், வெற்றிகரமான ஆஸ்திரேலியா போன்ற உலக அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் 2011 போல இந்தியா கோப்பையை வென்று சரித்திரம் படைக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

முன்னதாக 1983இல் கபில் தேவ் தலைமையில் முதல் சரித்திர கோப்பையை இந்தியா முத்தமிட்டது. ஆனால் அதன் பின் முகமது அசாருதீன், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்றவர்கள் தலைமையில் சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே போன்ற மகத்தான வீரர்களுடன் களமிறங்கியும் 1992, 1996, 1999, 2003, 2007 ஆகிய இடங்களில் இந்திய அணியால் சாம்பியன் பட்டத்தை தொட முடியவில்லை.

- Advertisement -

ஏபிடி கருத்து:
அந்த சூழ்நிலையில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற தோனி தலைமையில் 2011 உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் முதல் போட்டியிலிருந்தே சொல்லி அடித்த இந்தியா நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டியில் இலங்கையை தோற்கடித்து 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைத்தது. அத்தொடரில் சச்சின், சேவாக், ஜஹீர் கான், முனாப் படேல் போன்ற அனைவருமே வெற்றியில் முக்கிய பங்காற்றினார்கள்.

குறிப்பாக தம்முடைய உடல்நிலை சரியில்லாத போதிலும் ஆல் ரவுண்டராக அசத்திய யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருது வென்ற நிலையில் ஃபைனலில் கௌதம் கம்பீர் நங்கூரமாக 97 ரன்கள் அடித்து உறுதி செய்தார். அதை விட தொடர் முழுவதும் தடுமாறிய கேப்டன் தோனி முக்கியமான ஃபைனலில் முரளிதரனை எதிர்கொள்வதற்காக யுவராஜுக்கு முன் களமிறங்கி 91* ரன்கள் குவித்து அற்புதமான ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவுக்கு வெற்றியை பெற்று கொடுத்தார்.

- Advertisement -

மேலும் கடைசியில் மறக்க முடியாத சிக்ஸருடன் அபாரமான ஃபினிஷிங் கொடுத்ததாலும் கேப்டனாக செயல்பட்ட காரணத்தாலும் 2011 உலக கோப்பையை தோனி வென்றதாகவே பெரும்பாலான ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இருப்பினும் தோனி ஒற்றைய ஆளாக வெற்றியை கற்றுக் கொடுக்கவில்லை என்று கௌதம் கம்பீர் அடிக்கடி ரசிகர்களை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அதே கருத்தை தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் தம்முடைய யூடியூப் பக்கத்தில் கேள்வி எழுப்பி ரசிகருக்கு பதிலடியாக கொடுத்து பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: எல்லாம் கரெக்ட்டா போகுதுன்னா சந்தோசப்படாதீங்க.. அந்த 2 விஷயத்தால் இந்தியா 2023 உ.கோ தோற்கலாம் – அன்வர் எச்சரிக்கை

கிரிக்கெட் என்பது அணி விளையாட்டாகும். அதில் ஒரு வீரர் உலகக் கோப்பையை வெல்ல முடியாது. ஆனால் ட்விட்டரில் பல ரசிகர்கள் தோனி தனியாளாக கோப்பையை வென்றதாக பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். இருப்பினும் எம்எஸ் தோனி உலக கோப்பையை வெல்லவில்லை. மாறாக இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. அதே போல் லண்டன் லார்ட்ஸில் பென் ஸ்டோக்ஸ் 2019 உலக கோப்பையை வெல்லவில்லை இங்கிலாந்து வென்றது. மேலும் வாரிய உறுப்பினர்கள், வீரர்கள் துணை வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட அனைவரும் சேர்ந்தே உலக கோப்பையை வெல்ல முடியும்” என்று கூறினார்.

Advertisement