- Advertisement -
ஐ.பி.எல்

தேடிய கோலி.. மனமுடைந்த தல தோனி.. கோபத்தில் செய்த செயல்.. அப்டின்னா எல்லாம் முடிஞ்ச்சா? ரசிகர்கள் சோகம்

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக மே 18ஆம் தேதி நடைபெற்ற 68வது லீக் போட்டியில் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் சென்னையை வீட்டுக்கு அனுப்பிய பெங்களூரு 4வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அபார கம்பேக் கொடுத்தது.

முன்னதாக இப்போட்டியில் கடைசி நேரத்தில் தோனி மற்றும் ஜடேஜாவின் ஆகியோர் இணைந்து சென்னையின் வெற்றிக்கு போராடினார்கள். அதனால் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல கடைசி ஓவரில் சென்னைக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் தோனி 110 மீட்டர் பெரிய சிக்சரை மைதானத்திற்கு வெளியே பறக்க விட்டதால் சென்னை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பினர்.

- Advertisement -

முனமுடைந்த தோனி:
ஆனால் மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் சென்றதால் புதிய பந்தை பெற்ற யாஷ் தயாள் அதிர்ஷ்டத்துடன் தோனியை அவுட்டாக்கி ஜடேஜாவையும் ஃபினிஷிங் செய்ய விடாமல் ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்தார். மறுபுறம் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்ய முடியாததால் பெவிலியனுக்கு சென்ற தோனி மிகுந்த சோகமான முகத்துடன் மனமடைந்து ஏமாற்றத்துடன் அமர்ந்திருந்தார்.

அத்துடன் போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கை கொடுத்துக் கொண்டனர். ஆனால் முதல் ஆளாக கை கொடுக்கச் சென்ற தோனி திடீரென தாம் கேப்டன் இல்லை என்பதை உணர்ந்து ருதுராஜை வரச் சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்பினார். அதனால் ருதுராஜ் தலைமையில் சென்னை வீரர்கள் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுத்தார்கள். ஆனால் தோனி அவர்களுக்கு கை கொடுக்காமலேயே கோபத்துடன் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

அப்போது தோனிக்கு கை கொடுப்பதற்காக வரிசையில் வந்த விராட் கோலி தேடினார். இருப்பினும் அதற்குள் பெவிலியன் சென்ற தோனி மேற்கொண்டு வரவில்லை. ஏற்கனவே 42 வயதை கடந்து விட்டதால் கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த தோனி இந்த வருடத்துடன் ஓய்வு பெறுவார் என்று நம்பப்பட்டது. அந்த சூழ்நிலையில் ஒருவேளை இப்போட்டியில் வென்றிருந்தால் பிளே ஆஃப் சுற்று நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு கிடைத்திருக்கும்.

இதையும் படிங்க: சகாப்தம் முடிந்ததா? அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கே கோச் சிமன்ஸ் பதில்

ஆனால் தற்போது தோல்வியை சந்தித்ததால் அந்த வாய்ப்பு பறிபோயுள்ளது. அதே போல பிளே ஆஃப் சுற்றில் வென்று சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்று தோனியை வழியனுப்ப காத்திருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் ஏற்கனவே சொன்ன படி தமிழக ரசிகர்களுக்காக சென்னை மண்ணில் தம்முடைய கேரியரின் கடைசி போட்டியில் விளையாடும் வாய்ப்பு தோனிக்கு கிடைக்கவில்லை. அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் தோனி விளையாடியதை பார்த்தது இதுவே கடைசி முறை என்று பல சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -