IPL 2023 : இன்றைய முதல் போட்டியிலேயே தல தோனி மிகப்பெரிய சாதனையை நிகழ்த்த வாய்ப்பு – விவரம் இதோ

MS Dhoni Finisher
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் தொடரானது இன்று மார்ச் 31-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் துவங்குகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Hardik Pandya MS DHoni GT vs CSK

- Advertisement -

இந்த முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க இரு அணிகளுமே கடுமையாக போராடும் என்பதால் இந்த முதல் போட்டியே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

அதேபோன்று கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்த சென்னை அணி இம்முறை தோனிக்கு கடைசி சீசனாக அமைய இருப்பதினால் கோப்பையை வென்று அவருக்கு பிரியா விடை கொடுக்க வேண்டும் என்று தீவிரத்துடன் களமிறங்குகிறது.

MS Dhoni vs MI

அதேவேளையில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி இம்முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்ல உத்வேகம் காட்டும் என்பதனால் இன்றைய முதல் போட்டியே அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்நிலையில் இன்றைய போட்டியில் விளையாட இருப்பதன் மூலம் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி மிகப்பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்த அருமையான வாய்ப்பு இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

- Advertisement -

அந்த வகையில் இன்றைய போட்டியில் தோனி 22 ரன்கள் மட்டும் அடித்தால் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த ஏழாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் 4978 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 22 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் அவர் ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள் அடித்த ஏழாவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இதையும் படிங்க : IPL 2023 : நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய சி.எஸ்.கே அணியின் இளம்வீரர் – மாற்றுவீரர் அறிவிப்பு

இந்த பட்டியலில் விராட் கோலி, ஷிகார் தவான், டேவிட் வார்னர், ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா மற்றும் ஏபிடி வில்லியர்ஸ் ஆகிய ஆறு வீரர்கள் 5000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement