தற்போதைய கோச்சர்களுக்கு எல்லாம் கேப்டனாக இருந்துள்ள ஒரே கேப்டன் தல தோனி – வியக்க வைக்கும் தகவல் இதோ

Bravo
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய நடப்பு சாம்பியனான சி.எஸ்.கே அணியின் கேப்டனுமான மஹேந்திர சிங் தோனி இன்று ஜூலை 7-ஆம் தேதி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த மாபெரும் கேப்டன் என்ற சாதனையை படைத்திருக்கும் தோனி ஐபிஎல் தொடரிலும் சென்னை அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றபோது கேப்டனாக இருந்து வரலாறு படைத்துள்ளார்.

CSK

- Advertisement -

தோனியின் பிறந்த நாளான இன்று அவர் குறித்த சில சுவாரசியமான விடயங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தோனி ஐபிஎல் தொடரில் ஒரு விசித்திரமான சாதனைக்கும் சொந்தக்காரராக உள்ளார். அந்த சாதனை யாதனில் :

தற்போதைய ஐபிஎல் தொடர்களில் பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளர்களாக இருக்கும் பல வீரர்களுக்கு தோனி ஒரு காலத்தில் கேப்டனாக இருந்துள்ளார். அதுவே அவரது ஒரு தனித்துவமான சாதனை என்று கூறலாம். குறிப்பாக தற்போதைய சென்னை அணியின் முதன்மை பயிற்சியாளராக இருக்கும் ஸ்டீபன் பிளமிங்கே தோனியின் தலைமையின் கீழ் துவக்க வீரராக விளையாடியவர்தான் என்பதே அதற்கு சான்று.

Fleming

அதேபோன்று பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹசி, பந்துவீச்சு பயிற்சியாளர்கள் லட்சுமிபதி பாலாஜி, டுவைன் பிராவோ ஆகியோர் சிஎஸ்கே அணியில் கேப்டன் தோனியின் தலைமையின் கீழ் விளையாடி இருக்கின்றனர். தற்போது அவர்கள் பயிற்சியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கு ஏற்கனவே தோனி கேப்டனாக இருந்துள்ளார்.

- Advertisement -

இது தவிர்த்து மேலும் தற்போதைய பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களுக்கு இவர் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அந்த வகையில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்த பிரண்டன் மேக்கல்லம் சென்னை அணியில் தோனியின் தலைமையின் கீழ் விளையாடி உள்ளார். அதேபோன்று டெல்லி அணியின் ஆலோசகர் வாட்சன், சன்ரைசர்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் முரளிதரன் ஆகியோருக்கும் தோனி கேப்டனாக இருந்துள்ளார்.

இதையும் படிங்க : பர்த்டே ஸ்பெஷல் : புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய மகத்தான தோனி – விக்கெட் கீப்பராக படைத்துள்ள 5 உலக சாதனைகள் இதோ

அதுதவிர்த்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா போன்ற தற்போதைய பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களுக்கு தோனி கேப்டனாக செயல்பட்டுள்ளார். இப்படி ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இருக்கும் பலருக்கும் ஒரு காலத்தில் தோனி கேப்டனாக இருந்துள்ளார். இதில் ஏதேனும் பயிற்சியாளர்கள் எந்த வகையிலாவது விடுபட்டிருந்தால் அதனை கமெண்டில் தெரிவிக்கலாம் நண்பர்களே..

Advertisement