பர்த்டே ஸ்பெஷல் : புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய மகத்தான தோனி – விக்கெட் கீப்பராக படைத்துள்ள 5 உலக சாதனைகள் இதோ

Dhoni-4
- Advertisement -

நட்சத்திர முன்னாள் இந்திய வீரர் எம்எஸ் தோனி ஜூலை 7ஆம் தேதி தம்முடைய 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராஞ்சி போன்ற கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ஊரில் பிறந்து 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடித்தார். மேலும் 2007ஆம் ஆண்டு அனுபவமில்லாத கேப்டன்ஷிப் மிகச் சிறப்பாக வழி நடத்திய அவர் டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பை 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான வெள்ளைப்பந்து ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக மகத்தான சாதனை படைத்துள்ளார்.

Dhoni

- Advertisement -

அதே போல் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று அசத்தியுள்ள அவர் பல ரசிகர்களுக்கும் இளைஞர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார் என்றே சொல்லலாம். அப்படி பல பரிணாமங்களை கொண்ட தோனி விக்கெட் கீப்பராக இந்த உலகிலேயே புதிய பரிணாமத்தை ஏற்படுத்தினார் என்றால் மிகையாகாது. குறிப்பாக பள்ளி அளவில் கோல் கீப்பராக இருந்த அவர் இளம் வயது பயிற்சியாளரின் ஆலோசனையால் கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கிய காரணத்தாலேயே புத்தகத்தில் இருக்கும் நெறிமுறைகளை பின்பற்றாமல் தமக்கென்று புதிய ஸ்டைலை உருவாக்கினார்.

எடுத்துக்காட்டாக ஃபீல்டர் பந்தை எடுத்துப் போட்டால் அதை திரும்பாமலேயே ஸ்டம்ப்புகள் பக்கம் திருப்பி விட்டு ரன் அவுட் செய்வது பேட்ஸ்மேன்கள் சில இன்சுகள் காற்றில் காலை தூக்கினாலே கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வது போன்ற அவருடைய டெக்னிக் இந்த உலகிற்கே புதியதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

MS Dhoni Kapil Dev World Cup

மேலும் இந்திய விக்கெட் அத்துடன் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்து போடுபவர்களாக மட்டுமல்லாமல் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்ற வேண்டும் என்ற தற்போதைய நிலைமை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்த அவர் கீப்பராக செய்துள்ள சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

1. ஸ்டம்பிங் சாதனை: 3 வகையான கிரிக்கெட்டில் 538 போட்டிகளில் 195 முறை ஸ்டம்பிங் செய்துள்ள தோனி டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற அசைக்க முடியாத உலக சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இலங்கையின் குமார் சங்ககாரா 139 ஸ்டம்ப்களுடன் உள்ளார்.

Dhoni

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதிக ஸ்டம்ப்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை (123) படைத்துள்ள அவருக்கு அடுத்தபடியாக குமாரசங்ககாரா 2வது இடத்தில் (99) இருக்கிறார்.

- Advertisement -

2. மின்னல் வேகம்: கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிமோ பாலை வெறும் 0.08 நொடி வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி ஒட்டுமொத்த உலக கிரிக்கெட்டில் அதிவேகமாக ஸ்டம்பிங் செய்த விக்கெட் கீப்பர் என்ற மகத்தான உலக சாதனையை படைத்துள்ளார். மேலும் 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ராகுல் சர்மா வீசிய பந்தை மிட்சேல் மார்ஷ் தவறவிட்ட போது 0.09 நொடியில் ஸ்டம்பிங் செய்த அவரே 2வது இடத்திலும் இருக்கிறார்.

MS Dhoni Stumping

3. கேட்ச் சாதனை: கடந்த 2018ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் 5 கேட்ச்களை பிடித்த தோனி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார்.

- Advertisement -

4. அதிகபட்ச ஸ்கோர்: கடந்த 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சரவெடியாக 183* ரன்கள் குவித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். அதன் பின் உலகம் முழுவதிலும் நிறைய விக்கெட் கீப்பர்கள் விளையாடி வரும் போதிலும் இந்த சாதனையை இன்னும் உடைக்க முடியவில்லை.

Dhoni

இதையும் படிங்க:கோபம் வந்தா தோனி என்ன பண்ணுவாரு தெரியுமா? தோனியின் மறுபக்கத்தை பற்றி பேசிய – இஷாந்த் சர்மா

5. 10000 ரன்கள்: ஒருநாள் கிரிக்கெட்டில் 350 போட்டிகளில் 10773 ரன்கள் எடுத்துள்ள தோனி அதிக ரன்கள் எடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் உலக அளவில் 2வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையும் கொண்டுள்ளார். ஆனால் முதலிடத்தில் இருக்கும் சங்ககாரா 13341 ரன்களை 43.74 என்ற சராசரியில் மட்டுமே எடுத்துள்ள நிலையில் 50.57 என்ற சராசரியில் 10773 ரன்களை குவித்துள்ள தோனி உலகிலேயே ஒருநாள் போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட சராசரியில் 10000 ரன்கள் அடித்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற மகத்தான உலக சாதனை படைத்துள்ளார்.

Advertisement