கோபம் வந்தா தோனி என்ன பண்ணுவாரு தெரியுமா? தோனியின் மறுபக்கத்தை பற்றி பேசிய – இஷாந்த் சர்மா

Ishant-and-Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியானது 2007-ஆம் டி20 உலகக்கோப்பை தொடரையும், 2011-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரையும், 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வென்று மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றி அசத்தியது. கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த கேப்டனாக ரசிகர்கள் மத்தியில் போற்றப்படும் மகேந்திர சிங் தோனிக்கு நாளை ஜூலை 7-ஆம் தேதி 42-வது வயது பிறக்க இருக்கிறது.

Kohli dhoni

- Advertisement -

இந்த பிறந்த நாளை முன்னிட்டு அவர் குறித்த பல்வேறு செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் மைதானத்தில் எப்பொழுதுமே அமைதியாக இருந்து வீரர்களை அற்புதமாக வழிநடத்தும் சுபாவம் கொண்ட தோனிக்கு “கேப்டன் கூல்” என்ற பெயரும் உண்டு.

ஆனால் தோனியும் ஒரு சில சமயங்களில் தனது பொறுமையை இழந்து களத்தில் வீரர்களை கோபத்துடன் நடத்திய தருணங்கள் குறித்து அவருடன் விளையாடிய சில வீரர்கள் கருத்து தெரிவித்து வருவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தோனியின் தலைமையின் கீழ் பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா தோனிக்கு கோபம் வந்தால் என்ன நடக்கும்? என்பது குறித்து பேசியுள்ளார்.

Ishant Sharma 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : மஹி பாய்க்கு பல்வேறு திறமைகள் உள்ளன. அதேபோன்று களத்தில் அமைதியாகவும், கூலாகவும் இருக்கும் அவர் கோபம் வந்தால் அடிக்கடி தவறான வார்த்தைகளை பயன்படுத்துவார். அதனை நான் நேரிலேயே கேட்டு இருக்கிறேன். ஐபிஎல் போட்டியாக இருந்தாலும் சரி, இந்திய அணியின் போட்டியாக இருந்தாலும் சரி எப்பொழுதுமே அவரைச் சுற்றி வீரர்கள் அமர்ந்திருப்பார்கள்.

- Advertisement -

கிராமத்தில் மரங்களை சுற்றி நாம் நிழலுக்காக அமருவது போன்று அவரைச் சுற்றி எப்பொழுதுமே ஒரு கூட்டம் இருக்கும். ஒருமுறை நான் பந்துவீசி முடித்த பிறகு மஹி பாய் என்னிடம் வந்து : நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்களா? என்று கேட்டார். அதற்கு நானும் ஆமாம் என்று பதிலளித்தேன். உடனே கோபப்பட்ட அவர் “உனக்கு வயது ஆகிறது, வெளியேறிவிடு” என்று கூறினார்.

இதையும் படிங்க : இந்திய அணியிலிருந்து என்னையா நீக்குறீங்க. துலீப் டிராபியில் அசத்தி வரும் புஜாரா – என்ன பண்ணியிருக்காரு பாருங்க

அதோடு பீல்டிங்கின் போது நாம் பந்தை தவறவிட்டால் தோனி கோபப்படுவாரே தவிர மற்றபடி பெரிதாக கோவப்பட மாட்டார். ஒருமுறை அவர் என்னிடம் பந்தை எரிந்த போது நான் அவரது கோபத்தை பார்த்தேன். இரண்டாவது முறையும் அவர் பந்தினை எரிந்த போது மேலும் வேகமாக எனை நோக்கி ஏரிந்தார் என இஷாந்த் சர்மா தோனி குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement