ரோல் மாடலான தோனியுடன் ஒப்பிடாதீங்க.. என்னுடைய லட்சியத்தை கேட்டா எனக்கே சிரிப்பு வரும்.. துருவ் ஜுரேல்

Dhruv Jurel 9
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்தியா கோப்பையை வெல்ல உதவினர். அதே போல அத்தொடரில் அறிமுகமாக களமிறங்கிய சர்பராஸ் கான், ஆகாஷ் தீப் போன்ற இளம் வீரர்களும் அசத்தினார்கள். அதில் விக்கெட் கீப்பராக அறிமுகமாக களமிறங்கிய துருவ் ஜுரேல் சிறப்பாக விளையாடி அனைவரது பாராட்டுகளை பெற்றார்.

குறிப்பாக ராஞ்சியில் நடந்த நான்காவது போட்டியில் இந்தியா தோல்வியின் பிடியில் சிக்கிய போது முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் அடித்து காப்பாற்றிய அவர் 2வது இன்னிங்ஸில் 37* ரன்கள் அடித்து ஃபினிஷிங் கொடுத்தார். அந்த வகையில் அழுத்தமான நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்ற அவர் அடுத்த எம்எஸ் தோனியாக உருவெடுக்கும் பயணத்தில் இருப்பதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டினார்.

- Advertisement -

ரோல் மாடல்:
இருப்பினும் யாரும் தோனியாக முடியாது என்று தெரிவித்த துருவ் ஜுரேல் நான் நானாக பெயர் எடுக்க விரும்புவதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் தம்முடைய ரோல் மாடலான எம்எஸ் தோனியுடன் தம்மை ஒப்பிட வேண்டாம் என்று துருவ் ஜுரேல் மீண்டும் கூறியுள்ளார். அத்துடன் சிறுவயதில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது தம்முடைய லட்சியம் என்று சொன்னதாகவும் துருவ் ஜுரேல் தெரிவித்துள்ளார்.

ஆனால் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது எந்தளவுக்கு கடினம் என்பதை இப்போது நினைத்து சிரிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்ருமாறு. “ஆரம்பம் முதலே எம்.எஸ். தோனி என்னுடைய ரோல் மாடல். என்னுடைய கேரியரின் ஆரம்பத்திலேயே விக்கெட் கீப்பிங் செய்ய துவங்கியதால் அப்போதிலிருந்தே அவரை நான் என்னுடன் சம்பந்தப்படுத்திக் கொண்டேன்”

- Advertisement -

“தற்போது அனைவரும் நான் அடுத்த தோனியாக வருவேன் என்று சொல்கின்றனர். ஆனால் அடுத்த தோனியாக வருவது மிகவும் கடினம். யாரும் எம்எஸ் தோனியாக வர முடியாது. எனவே நான் துருவ் ஜுரேலாக வருவதற்கு விரும்புகிறேன். ஏனெனில் உலகக் கிரிக்கெட்டில் யாரும் எம்.எஸ். தோனி செய்துள்ள சாதனைகளை படைக்க முடியும் என்று நான் கருதவில்லை. ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் டெஸ்ட் போட்டிகளுக்கே நான் முன்னுரிமை கொடுப்பேன்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 : தோனியின் சிஎஸ்கே சவாலை – ரிஷப் பண்ட் டெல்லி சமாளிக்குமா? புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

“சிறுவயதாக இருந்த போது இதை என்னிடம் சிலர் கேட்டனர். அப்போது 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புவதாக நான் சொன்னேன். ஆனால் பின்பு தான் 200 டெஸ்ட் போட்டிகள் என்பது மிகவும் அதிகம் என்பதை உணர்ந்து சிரித்தேன். நான் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள விரும்புகிறேன். புல் ஷாட் எனக்கு பிடிக்கும். ரிங்கு சிங் எனக்கு பிடித்த மாநில வீரர். ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் பிடித்த வீரர்கள்” என்று கூறினார்.

Advertisement