ஐபிஎல் 2024 : தோனியின் சிஎஸ்கே சவாலை – ரிஷப் பண்ட் டெல்லி சமாளிக்குமா? புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. அதற்கு சவாலை கொடுக்கவுள்ள 9 எதிரணிகளில் இம்முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சென்னைக்கு சவால் விடுமா என்ற அலசலைப் பற்றிப் பார்ப்போம்.

முதலில் இம்முறை ரிஷப் பண்ட் காயத்தில் இருந்து குணமடைந்து விளையாட உள்ளார் என்பது டெல்லி அணிக்கு மனதளவில் பலத்தை கொடுக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஆனால் காயத்திலிருந்து நேரடியாக களமிறங்கும் அவர் எந்தளவுக்கு பேட்டிங்கில் அசத்துவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே போல ஓப்பனிங் ஜோடியில் டேவிட் வார்னருக்கு நிகராக பிரிதிவி ஷா சமீப காலங்களாகவே அசத்துவதில்லை என்பது டெல்லிக்கு பின்னடைவாகும்.

- Advertisement -

சென்னை – டெல்லி:
இருப்பினும் ஆல் ரவுண்டரான மிட்சேல் மார்ஷ் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் மிடில் ஆர்டரில் பலத்தை சேர்க்கும் தரத்தை கொண்டுள்ளனர். ஆனால் லோயர் மிடில் ஆர்டரில் அக்சர் பட்டேலுக்கு நிகராக லலித் யாதவ், அபிஷேக் போரேல், பிரவின் துபே போன்ற இளம் வீரர்கள் பெரும்பாலான போட்டிகளில் ஃபினிஷிங் செய்யும் அளவுக்கு தரமாக இல்லை.

அதே சமயம் இஷாந்த் சர்மா, அன்றிச் நோர்ட்ஜெ, முகேஷ் குமார், ஜே ரிச்சர்ட்சன் ஆகியோர் அடங்கிய டெல்லியின் வேகப்பந்து வீச்சு துறை ஓரளவு தரமாகவும் வலுவாகவும் இருக்கிறது. பேட்டிங்கிலும் அசத்தக்கூடிய அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சுழல் பந்து வீச்சு துறையை நன்றாகவே பலப்படுத்துகின்றனர். மறுபுறம் சென்னை அணியில் டேவோன் கான்வேவுக்கு பதிலாக ருத்ராஜுடன் சேர்ந்து ஓப்பனிங்கில் அசத்தும் திறமையை ரச்சின் ரவீந்தரா கொண்டுள்ளதை 2023 உலகக் கோப்பையில் பார்த்தோம்.

- Advertisement -

அதே உலகக் கோப்பையில் அசத்திய ஆல் ரவுண்டர் டார்ல் மிட்சேல் ஓய்வு ஓய்வு பெற்ற ராயுடுவின் இடத்தை நிரப்புவார் என்று நம்பப்படுகிறது. அவருடன் மிடில் ஆர்டரில் அனுபவம் கொண்ட அஜிங்க்ய ரகானே, மொய்ன் அலி ஆகியோர் வலு சேர்க்கின்றனர். லோயர் மிடில் ஆர்டரில் சந்தேகமின்றி சிக்சர்களை பறக்க விடக்கூடிய சிவம் துபே, 2023 ஃபைனலில் ஃபினிஷிங் கொடுத்த ரவீந்திர ஜடேஜா மற்றும் கேப்டன் எம்.எஸ். தோனி ஆகியோர் ஃபினிஷர்களாக அசத்தக்கூடியவர்கள்.

சுழல் பந்து வீச்சு துறையில் வலு சேர்க்கும் மஹீஸ் தீக்சனாவுடன் மிட்சேல் சான்ட்னர், ஜடேஜா, மொய்ன் அலி ஆகியோர் பேட்டிங்கிலும் அசத்தக்கூடியவர்கள் என்பது பலமாகும். அதே போல வேகப்பந்து வீச்சு துறையில் சர்துல் தாக்கூர் மற்றும் தீபக் சஹர் ஆகியோர் இம்முறை மீண்டும் ஜோடியாக பலம் சேர்க்கின்றனர். 2018, 2021 சீசன்களில் கோப்பையை வெல்ல உதவிய இவர்கள் பேட்டிங்கிலும் அசத்தக்கூடியவர்கள் என்பது பலமாகும்.

- Advertisement -

மேலும் பதிரனா காயத்தை சந்தித்தாலும் அதை சமாளிக்க முஸ்தஃபீசுர் ரகுமானுடன் கடந்த சீசன்களில் கிடைத்த வாய்ப்பில் அசத்திய ராஜவர்தன் ஹங்கர்கேக்கர், முகேஷ் சவுத்ரி, துசார் தேஷ்பாண்டே ஆகியோரும் தயாராக உள்ளனர். அந்த வகையில் பலம் பலவீனங்களை பார்க்கும் போது ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்தாலும் கூட டெல்லி அணியை தோற்கடிப்பதற்கு தேவையான தரமும் அனுபவமும் எம்.எஸ். தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியிடம் உள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: நீங்க மட்டும் கோப்பை ஜெயிச்சா அதுவும் நடக்கும்.. மகளிர் ஆர்சிபி அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஏபிடி

ஐபிஎல் வரலாற்றில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் இதுவரை 29 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் சென்னை 19 போட்டிகளில் வென்று திகழ்கிறது. டெல்லி 10 போட்டிகளில் வென்றுள்ளது.

Advertisement