நீங்க மட்டும் கோப்பை ஜெயிச்சா அதுவும் நடக்கும்.. மகளிர் ஆர்சிபி அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஏபிடி

- Advertisement -

மகளிர் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 17ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. அதில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்ற டெல்லியை எலிமினேட்டர் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பையை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பி வைத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்வது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் இந்த 2 அணிகளுமே ஆடவர் ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. எனவே மகளிர் ஐபிஎல் தொடரில் இம்முறை புதிய சாம்பியனாக சாதனை படைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆடவர் ஐபிஎல் தொடரில் காலம் காலமாக கிண்டல்களை மட்டுமே சந்தித்து வரும் பெங்களூரு அணி இந்த மகளிர் தொடரிலாவது கோப்பையை வென்று சரித்திரத்தை மாற்றுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

வாழ்த்திய ஏபிடி:
இந்நிலையில் இந்த இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லுமாறு மகளிர் ஆர்சிபி அணிக்கு ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக மகளிர் ஐபிஎல் தொடரில் நீங்கள் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தால் அது ஆடவர் ஆர்சிபி அணிக்கும் உத்வேகத்தை உண்டாக்கி சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு உதவும் என்று ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இன்று நடைபெறும் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 2 பவரான அணிகள் மோதுகின்றன. அதில் இரண்டு தனித்து நிற்கும் அணிகள் விளையாடுகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன”

- Advertisement -

“அதைப் பார்ப்பதற்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. ஃபைனல் வந்ததற்காக 2 அணிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். தனி நபராகவும் அணியாகவும் சேர்ந்து இத்தொடரில் அசத்திய இந்த இரண்டு அணிகளும் ஃபைனல் வருவதற்கு தகுதியானவர்கள். ஆர்சிபி அணிக்காக ஒரு சிறப்பு ஆதரவு தருகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். கோப்பையை வீட்டுக்கு கொண்டு வந்து இந்த மாதத்தின் பிற்பகுதியில் துவங்கும் ஐபிஎல் தொடரில் ஆடவர் ஆர்சிபி அணிக்கு உத்வேகத்தை கொடுங்கள்”

இதையும் படிங்க: கவலை வேண்டாம் ஒன்னும் பண்ண முடியாது.. கோலி பற்றி ரோஹித் உறுதியா சொல்லிட்டாரு.. கிர்த்தி ஆசாத்

“வாழ்த்துக்கள் நண்பர்களே. நீங்கள் விளையாடும் ஒவ்வொரு பந்தையும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன்” என்று கூறினார். முன்னதாக மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் டெல்லி அணியிடம் பெங்களூரு தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இம்முறை பெங்களூரு அதை மாற்றி கோப்பையை வெல்லுமா என்பதே ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Advertisement