19 வயது இளம் சி.எஸ்.கே வீரருக்கு பேட்டிங் டிப்ஸ் வழங்கிய தல தோனி – அப்படி என்ன டிப்ஸ் தெரியுமா?

Hangargekar
- Advertisement -

நடப்பு ஐபிஎல் சாம்பியனான சென்னை சிஎஸ்கே அணியானது இந்த மாதம் மார்ச் 26-ம் தேதி துவங்க உள்ள பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தற்போது சூரத்தில் உள்ள லால்பாய் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்னை அணியில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான வீரர்கள் தற்போது சூரத்திற்கு பயணம் மேற்கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மெகா ஏலத்தில் புதிதாக சில வீரர்கள் வாங்கப்பட்டு அவர்களும் தற்போது முன்கூட்டியே வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியைச் சேர்ந்த இளம் வீரரான ராஜ்வர்தன் ஹங்கரேக்கர் என்கிற வீரரும் தற்போது சிஎஸ்கே அணியில் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். 19 வயதே ஆன அவர் வேகப்பந்து வீச்சாளராக இருப்பது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அதிரடி காட்டக் கூடியவர். இதன் காரணமாக அவர் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 19 வயதுக்கு உட்பட்ட உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அவர் முக்கிய வீரராகவும் விளையாடியிருந்தார். இந்நிலையில் தற்போது சூரத் மைதானத்தில் அவர் பயிற்சி பெறும்போது தோனியிடம் சில டிப்ஸ்களை பெரும் வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அவர் தனது திறனை வெளிக்காட்டும் வகையில் அதற்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் பயிற்சியில் பந்துவீச்சு மட்டுமின்றி, பேட்டிங்கிலும் அதிக கவனத்தைச் செலுத்தி பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவருக்கு தோனி பெரிய பெரிய சிக்சர்களை எவ்வாறு விளாச வேண்டும் என்பது குறித்த பேட்டிங் நுணுக்கங்களை பகிர்ந்துள்ளார். அவரின் இந்த டிப்ஸ்க்குப் பிறகு சில சிக்சர்களையும் அவர் அடிக்கும் வீடியோவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : வீடியோ : நடந்து சென்றபோது கவனக்குறைவால் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த ஆஸி வீரர் – இப்படியா போவீங்க

19 வயதே ஆன இளம் வீரரான இவருக்கு தோனியின் தலைமையில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அவரது திறன் இன்னும் மேம்படும் என்பதனால் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சிஎஸ்கே நிர்வாகமும் கருதுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement