நடந்து சென்றபோது கவனக்குறைவால் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த ஆஸி வீரர் – இப்படியா போவீங்க

Carey
- Advertisement -

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பாகிஸ்தானில் நிலவிவந்த அசாதாரணமான சூழ்நிலை காரணமாக கடந்த பல ஆண்டுகளாகவே அங்கே கிரிக்கெட் தொடர்கள் நடைபெறாமல் இருந்த வேளையில் தற்போது மெல்ல மெல்ல ஒவ்வொரு அணியாக பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

அந்த வகையில் பாகிஸ்தான் நாட்டிற்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது இந்த தொடரில் வெற்றிகரமாக விளையாடி வருகின்றது. மார்ச் 4ஆம் தேதி ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது.

- Advertisement -

பின்னர் அந்த மைதானம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அதனை கடந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கராச்சி மைதானத்தில் மார்ச் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர்கள் கராச்சியில் உள்ள ஹோட்டலில் தங்கி இந்த இரண்டாவது போட்டிக்காக தீவிர பயிற்சி செய்து வருகின்றனர். இவ்வேளையில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி ஹோட்டலில் நடந்து செல்லும் போது தவறுதலாக கவனக்குறைவால் நீச்சல் குளத்தில் தவறி விழுந்தார்.

- Advertisement -

இதனை வீடியோவாக எடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் நீச்சல் குளத்தில் தவறி விழுந்த அந்த வீடியோவிற்கு சிரித்தபடி அவர் எமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : தார் ரோட் பிட்ச் உருவாக்கி பல்ப் வாங்கிய பாகிஸ்தான்! கோபத்தில் ஐசிசி கொடுத்த தண்டனை

நீச்சல் குளத்தில் தவறி விழப்பாகிறோம் என்பதை அறிந்த அலெக்ஸ் கேரி சுதாரித்து தன்னுடைய கையிலிருந்த போனை மட்டும் சக வீரர்களிடம் தூக்கி எறிந்துவிட்டு நீச்சல் குளத்தில் விழுந்தார். பின்னர் அங்கிருந்து அவர் ஏறி வரும் போது சக வீரர்கள் அனைவரும் அவரை சிரித்தபடியே வரவேற்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement