உங்கள மாதிரி வன்மம் புடிச்சவர பாத்ததில்ல, ஆதாரத்துடன் சிக்கிய கெளதம் கம்பீரை – திட்டி தீர்க்கும் தோனி ரசிகர்கள், நடந்தது என்ன?

Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. அந்த போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மிடில் ஆர்டரில் இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நங்கூரமாக நின்று 267 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கும் அளவுக்கு சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இந்தியாவின் மானத்தை ஓரளவு காப்பாற்றினர்.

முன்னதாக இந்த போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட நட்சத்திர முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் வழக்கம் போல அதிரடியான விமர்சனங்களை பேசி ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். குறிப்பாக ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக விராட் கோலிக்கு பேட்டிங் செய்ய தெரியவில்லை என்று விமர்சித்த அவர் தேசப்பற்று இல்லாமல் போட்டி முடிந்த பின் பாகிஸ்தான் வீரர்களுடன் கை கொடுத்த சிரித்து பேசியதையும் கடுமையாக விமர்சித்தார்.

- Advertisement -

வன்மமான கம்பீர்:
அதற்கு முன்பாகவே 2011 உலகக் கோப்பை வெற்றியை சச்சின் உட்பட அனைவரும் சேர்ந்தே பெற்றுக் கொடுத்த போதிலும் ஃபைனலில் 91* ரன்கள் அடித்த தோனியை மட்டும் அனைவரும் பாராட்டி வருவதாக அவர் கடந்த பல வருடங்களாக விமர்சித்து வருவதை அனைவருமே அறிவார்கள். சொல்லப்போனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட 2011 உலகக்கோப்பை வெற்றியில் ஃபைனலில் தோனி அடித்த சிக்சரை மட்டுமே அனைவரும் பாராட்டுவதாக கௌதம் கம்பீர் மீண்டும் விமர்சித்திருந்தார்.

அந்த நிலையில் அப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 2010 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 83 ரன்கள் அடித்த நீங்கள் இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்று சிறப்பாக செயல்பட்டீர்கள் என கௌதம் கம்பீர் நேரலையில் முகமது கைஃப் பாராட்டினார். ஆனால் அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த கௌதம் கம்பீர் அப்போட்டியில் தோனியுடன் இணைந்து 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் கடைசியில் சோயப் அக்தருக்கு எதிராக காலத்திற்கும் மறக்க முடியாத சிக்ஸரை அடித்து ஃபினிஷிங் கொடுத்த ஹர்பஜன் சிங் தான் வெற்றி பெற்று கொடுத்ததாக கூறினார்.

- Advertisement -

அதை அப்படியே ரெக்கார்ட் செய்த தோனியின் ரசிகர்கள் வாழ்க்கையில் உங்களைப் போன்ற ஒரு வன்மம் பிடித்தவரை பார்த்ததில்லை என சமூக வலைதளங்களில் பதிவிட்டு விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அந்த ஆசிய கோப்பை போட்டியில் ஹர்பஜன் சிங் கடைசியில் சிக்சர் அடித்து வெற்றியை கொடுத்தார் என்று சொல்லும் நீங்கள் பெருமைக்காக கூட 2011 உலகக் கோப்பை ஃபைனலில் தோனி சிக்ஸர் அடுத்து வெற்றியை பெற்றுக் கொடுத்தார் என சொல்லாதது? ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதையும் படிங்க: இவ்ளோ நடந்தும் அதை செஞ்ச இந்தியா கெத்து தான், பாகிஸ்தான் கண்டிப்பா திண்டாடிருப்பாங்க – சல்மான் பட் பாராட்டு

மேலும் இதிலிருந்து சிறப்பாக செயல்பட்டாலும் தோனி மற்றும் விராட் கோலி போன்றவர்களை நீங்கள் தொடர்ந்து வேண்டுமென்றே வன்மத்திற்காக விமர்சித்து வருவது நிரூபணமாகியுள்ளதாகவும் ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இதை தொடர்ந்து இந்தியா தம்முடைய 2வது ஆசிய கோப்பை லீக் போட்டியில் நேபாளை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement