ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளாத தல தோனி.. பின்னால் இருக்கும் காரணம் – என்ன தெரியுமா?

Dhoni
- Advertisement -

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழாவானது மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்த நிகழ்வின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்த வேளையில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நபர்கள், பிரபலங்கள் மற்றும் திரைத்துறையினர் என பலதரப்பட்ட முக்கிய நபர்களுக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த வகையில் இந்தியா முழுவதும் உள்ள பிரபலங்களை நேரில் சந்தித்த நிர்வாகிகள் முறைப்படி கோயில் திறப்பு விழா அழைப்பிதழை வழங்கி வரவேற்று இருந்தனர். அந்த வகையில் இன்று நடைபெற்ற முடிந்த இந்த விழாவில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வினை ஒரு பெரிய நிகழ்வாக மாற்றி இருந்தனர்.

- Advertisement -

அப்படி இன்று நடைபெற்ற இந்த ராமர் கோவில் திறப்பு விழாவில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் பிரசாத், அணில் கும்ப்ளே மற்றும் மிதாலி ராஜ் போன்ற பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து இருந்தார்கள்.

ஆனால் தற்போதைய இந்திய அணியில் விளையாடி வரும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஓய்வு பெற்ற கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதில் கோலி, ரோகித் ஆகியோர் தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் பங்கேற்க இருப்பதினால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஆனால் ஓய்வு பெற்ற இந்திய வீரரான தோனி ஏன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அதற்கு பதிலாக இருக்கும் உண்மைகளாவது : எப்பொழுதுமே இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி மதம் சார்ந்த அல்லது அரசியல் சார்ந்த பொதுவெளியில் நடக்கும் விழாக்களில் பங்கேற்பது கிடையாது. அந்த வகையிலேயே அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விராட் கோலிக்கு பதிலாக இங்கிலாந்து தொடரின் இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ள.. 3 தகுதியான வீரரகள்

அதே போன்று சமூக வலைதளத்தில் பெரிய நாட்டம் இல்லாத அவர் பொது இடத்திற்கு வந்து பிரபலம் தேடிக்கொள்ள விரும்பியது கிடையாது. இதுபோன்ற சில காரணங்களினால் தான் தோனி இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

Advertisement