விராட் கோலிக்கு பதிலாக இங்கிலாந்து தொடரின் இந்திய அணியில் விளையாட வாய்ப்புள்ள.. 3 தகுதியான வீரர்கள்

Virat Kohli pujara
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்துள்ளார். பேட்டிங் துறையின் முதுகெலும்பாக பார்க்கப்படும் அவர் இப்படி கடைசி நேரத்தில் விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

மேலும் அவருக்கான மாற்று வீரரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் முதலிரண்டு அவருடைய இடத்தில் விளையாடுவதற்கு தகுந்த வீரர்களை பற்றி பார்ப்போம்.
1. செட்டேஸ்வர் புஜாரா: ஒரு கட்டத்தில் முதன்மை வீரராக இருந்த இவர் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய பெருமைக்குரியவர். இருப்பினும் சமீப காலங்களில் தடுமாறியதால் கழற்றி விடப்பட்ட அவர் கடுமையாக போராடி மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

ஆனால் அந்த வாய்ப்பில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சொதப்பிய அவர் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளார். இருப்பினும் நடைபெற்று வரும் 2024 ரஞ்சிக் கோப்பையில் முதல் போட்டியில் இரட்டை சதமடித்து அசத்திய அவர் நேற்று விதர்பாவுக்கு எதிராக முடிந்த 2வது போட்டியிலும் 100+ ரன்கள் விளாசினார். எனவே விராட் கோலிக்கு நிகரான அனுபவத்தை கொண்டுள்ள இவருக்கு தேர்வுக்குழு வாய்ப்பு கொடுக்கலாம்.

2. சர்பராஸ் கான்: கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் ரன் மெஷினாக செயல்பட்டு வரும் இவர் 44 முதல் தர போட்டிகளில் 3751 ரன்களை 68.20 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ளார். இருப்பினும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காதது சமீப காலங்களாகவே பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தியது. சொல்லப்போனால் நேற்று முன்தினம் நிறைவு பெற்ற இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிரான பயிற்சி போட்டியில் அரை சதமடித்து தேசிய அணியில் விளையாட போராடும் அவருக்கு ஒருவேளை இம்முறை வாய்ப்பு கிடைக்கலாம்.

- Advertisement -

3. ரஜத் படிடார்: முதல் தர கிரிக்கெட்டில் 55 போட்டிகளில் சரியாக 4000 ரன்களை 45.97 என்ற சராசரியில் குவித்துள்ள இவரும் கடந்த சில வருடங்களாகவே உள்ளூரில் தொடர்ந்து அசத்தி வருகிறார். குறிப்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் மற்ற வீரர்கள் 25 ரன்கள் கூட எடுக்கவில்லை.

இதையும் படிங்க: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா.. ஆஸ்திரேலிய வீரர் பாதிப்பு – வெ.இ தொடரில் இருந்து விலக வாய்ப்பு

அப்போது தனி ஒருவனாக இங்கிலாந்து பவுலர்களை நொறுக்கிய அவர் 151 (158) ரன்களை விளாசி கடைசியில் இந்தியா ஏ அணி போட்டியை டிரா செய்வதற்கு முக்கிய பங்காற்றினார். எனவே தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் இவருக்கு தான் விராட் கோலிக்கு பதிலாக இத்தொடரில் விளையாடுவதற்கான அதிகப்படியான வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement