மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த கொரோனா.. ஆஸ்திரேலிய வீரர் பாதிப்பு – வெ.இ தொடரில் இருந்து விலக வாய்ப்பு

Travis-Head
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

அதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த தொடரில் இருந்து சமீபத்தில் முக்கிய வீரர்களான மேக்ஸ்வெல் மற்றும் ரிச்சர்ட்சன் ஆகியோர் விலகி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீரராக ஒருநாள் அணியில் இடம் பிடித்திருந்த டிராவிஸ் ஹெட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனெனில் பிரிஸ்பேனில் இருந்து வரும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இருப்பதால் அவர் இந்த தொடரில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2024 டி20 உ.கோ சான்ஸ்.. உங்களுக்கு கிடைக்கணும்னா அதை செய்ங்க.. ராகுலுக்கு ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்

ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவ துவங்கிய கொரோனா பாதிப்பால் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் பெரிய பாதிப்பு ஏற்பட்ட வேளையில் தற்போது மீண்டும் அந்த பாதிப்பு தலையை தூக்க ஆரம்பித்துள்ளது.

Advertisement