2024 டி20 உ.கோ சான்ஸ்.. உங்களுக்கு கிடைக்கணும்னா அதை செய்ங்க.. ராகுலுக்கு ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்

Aakash Chopra 6
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. அதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 தொடரை வென்ற இந்தியா அடுத்ததாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரை சமன் செய்தது. அதன் பின் மீண்டும் சொந்த ஊரில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

இருப்பினும் இந்த 3 தொடரிலும் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் இடம் பெறவில்லை. 2019 காலகட்டங்களில் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக விளையாடி வந்தார். ஆனால் 2022 டி20 உலகக் கோப்பையில் தடவலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்த அவரை தேர்வுக் குழு அதிரடியாக கழற்றி விட்டது.

- Advertisement -

உலகக்கோப்பை வாய்ப்பு:
அந்த நிலையில் ரிஷப் பண்ட் காயமடைந்ததால் ஒருநாள் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். அத்துடன் சமீபத்திய தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் சதமடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை 14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் தேர்வு செய்த தேர்வுக்குழு அவரை கழற்றி விட்டுள்ளது.

அத்துடன் ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிசான், ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் போட்டிக்கு இருப்பதால் அவருக்கு 2024 டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைப்பது கடினமாகியுள்ளது. இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக இருக்கும் நீங்கள் ஓப்பனிங் இடத்திற்கு பதிலாக 4வது இடத்தில் களமிறங்கி அபாரமாக விளையாடினால் மட்டுமே உலகக்கோப்பை வாய்ப்பு கிடைக்கும் என்று ராகுலுக்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “4வது இடத்தில் கே.எல் ராகுல் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம். ஒருவேளை உலகக் கோப்பையில் விளையாட விரும்பினால் அவர் 4வது இடத்தில் விளையாட வேண்டும். அதனால் 3வது இடத்தில் விளையாட ஆயுஷ் பதோனி, தீபக் ஹூடா, பிரேரக் மன்கட் உள்ளனர். பல்வேறு இடங்களில் விளையாடுவதற்கு அவர்களுடைய அணியில் நிறைய ஆப்ஷன்கள் இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: ஐசிசி 2023 சிறந்த கனவு அணி அறிவிப்பு.. கேப்டனாக சூர்யகுமார்.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்

அதாவது மிடில் ஆர்டரில் விளையாடி அசத்தியதால் 2023 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பு ராகுலுக்கு கிடைத்தது. அதே போல ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் விளையாடி அசத்தினால் மட்டுமே ராகுல் டி20 உலகக் கோப்பை இடத்தை பிடிக்க முடியும் என்று ஆகாஷ் சோப்ரா கூறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement