ஐசிசி 2023 சிறந்த கனவு அணி அறிவிப்பு.. கேப்டனாக சூர்யகுமார்.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்

Suryarkumar Yadav India
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் 2023 காலண்டர் வருத்தில் நிறைய டி20 போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதில் நிறைய கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி நாட்டின் வெற்றிக்கு போராடி ரசிகர்களையும் மகிழ்வித்தனர். இந்நிலையில் 2023 காலண்டர் வருடத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அசத்திய 11 வீரர்களை கொண்ட சிறந்த கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் முதல் துவக்க வீரராக கடந்த வருடம் அறிமுகமாகி 14 போட்டிகளில் 430 ரன்களை 159 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்துள்ள இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இடம் பிடித்து அசத்தியுள்ளார். 2வது துவக்க வீரராக இங்கிலாந்துக்காக கடந்த வருடம் வெறும் 8 போட்டிகளில் 394 ரன்களை 169.09 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிங் வெளுத்து வாங்கிய அசத்திய பிலிப் சால்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது.

- Advertisement -

3வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரான் 13 போட்டிகளில் 384 ரன்கள் விளாசி இடம் பிடித்துள்ளார். 4வது இடத்தில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் இடம் பிடித்துள்ளார். குறிப்பாக கடந்த டிசம்பரில் தென்னாப்பிரிக்க மண்ணில் ஜோஹன்ஸ்பர்க் நகரில் கேப்டனாக சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த அவரை தங்களின் இந்த கனவு அணியின் கேப்டனாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.

அவரை தொடர்ந்து மிடில் ஆர்டரில் நியூசிலாந்துக்காக கடந்த வருடம் 576 ரன்கள் குவித்து வெற்றிகளில் பங்காற்றிய மார்க் சேப்மேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 6வது இடத்தில் ஜிம்பாப்வே அணியின் பேட்டிங், பவுலிங் துறைகளில் அசத்தக்கூடிய தரமான ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா தேர்வாகியுள்ளார். 7வது இடத்தில் உகாண்டா அணியின் அல்பேஸ் ரம்ஜானி தேர்வாகி அந்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

- Advertisement -

8வது இடத்தில் அயர்லாந்து அணியின் பவுலிங் ஆல் ரவுண்டர் மார்க் அடைர் 26 விக்கெட்டுகளை 7.42 என்ற எக்கனாமியில் எடுத்து கடந்த வருடம் அசத்தியதால் இந்த அணியில் தேர்வாகியுள்ளார். முதன்மை ஸ்பின்னராக இந்தியாவின் ரவி பிஸ்னோய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் 18 விக்கெட்டுகளை எடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்ற அவர் நம்பர் ஒன் பவுலராகவும் முன்னேறியதால் இந்த அணியில் தேர்வாகியுள்ளார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விலகிய விராட் கோலி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பால்.. ரசிகர்கள் ஏமாற்றம் காரணம் என்ன?

அதே போல வேகப்பந்து வீச்சாளர்களாக ஜிம்பாப்வே அணிக்காக 13 போட்டிகளில் 26 விக்கெட்டுகளையும் இந்தியாவுக்காக 21 போட்டிகளில் 26 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்திய ரிச்சர்ட் ங்கரவா, அரஷ்தீப் சிங் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த அணி: யசஸ்வி ஜெய்ஸ்வால், பில் சால்ட், நிக்கோலஸ் பூரான், சூரியகுமார் யாதவ் (கேப்டன்), மார்க் சேப்மேன், சிக்கந்தர் ராசா, அல்பேஸ் ரம்ஜானி, மார்க் அடைர், ரவி பிஷ்னோய், ரிச்சர்ட் ங்கரவா, அரஷ்தீப் சிங்

Advertisement