WTC Final : ரகானே தேர்வாக தேர்வுக்குழுவுக்கு சிக்னல் கொடுத்த தோனி, ஃபைனலில் விளையாடும் 5 ரிசர்வ் வீரர்கள் – வெளியான ரிப்போர்ட்

- Advertisement -

இங்கிலாந்து லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன. குறிப்பாக கடந்த முறை விராட் கோலி தலைமையில் ஃபைனல் வரை சென்று நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் வென்று சரித்திரம் படைப்பதற்காக 15 பேர் கொண்ட அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட நட்சத்திர சீனியர் வீரர் அஜிங்க்ய ரகானே சேர்க்கப்பட்டது யாருமே எதிர்பாராத ஒன்றாக அமைந்தது.

ஏனெனில் கடந்த 2011இல் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி தலைமையில் அறிமுகமாகி 2015 உலகக்கோப்பையில் முதன்மை வீரராக விளையாடிய அவர் நாளடைவில் மெதுவாக விளையாடியதாலும் ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டதாலும் அதிரடியாக கழற்றி விடப்பட்டார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் துணை கேப்டனாக கடந்த 10 வருடங்களாகவே நிறைய வெற்றிகளில் பங்காற்றி வந்த அவர் அதன் உச்சகட்டமாக 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 36க்கு ஆல் அவுட்டான பின் நாடு திரும்பிய விராட் கோலிக்கு பதிலாக கேப்டனாக பொறுப்பேற்று 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

தோனியின் சிக்னல்:
ஆனால் அத்தொடருக்கு பின் சதமடிக்காமல் தடுமாறியதால் கழற்றி விடப்பட்ட அவர் 2022 பிப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற தொடருடன் அதிரடியாக நீக்கப்பட்டார். அந்த சமயத்தில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க முடிவெடுத்துள்ளதாக தேர்வுக்குழு அறிவித்ததால் ரகானேவின் கேரியர் முடிந்ததாக கருதப்பட்டது. ஆனால் மனம் தளராமல் போராடி வந்த அவர் சமீபத்திய ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்து ஓரளவுக்கு ஃபார்முக்கு திரும்பிய நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் யாருமே எதிர்பாராத வகையில் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டில் வித்தியாசமான ஷாட்டுகளை அடித்து முழுமையான ஃபார்முக்கு திரும்பி அந்நியனாக செயல்பட்டு வருகிறார்.

மறுபுறம் சூரியகுமார் யாதவ் மெதுவாக விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டிலேயே தடுமாறும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்த காரணத்தால் எப்போதுமே இந்திய மண்ணில் விட வெளிநாடுகளில் சிறப்பாக செயல்பட்ட அனுபவத்தைக் கொண்ட ரகானே தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும்பாலானவர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் அணியில் ரகானேவை தேர்வு செய்வதற்கு முன்பாக சென்னை கேப்டன் எம்எஸ் தோனியிடம் இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வுக்குழு ஆலோசனை கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதாவது இந்தியாவுக்கு 3 விதமான உலக கோப்பைகளை வென்று கொடுத்து 2010இல் முதல் முறையாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாகவும் தரம் உயர்த்திய பெருமையைக் கொண்ட தோனி ஓய்வு பெற்றாலும் இப்போதும் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழுவினரிடம் அதிக மதிப்பை கொண்டவராகவே இருந்து வருகிறார். அத்துடன் ஏகப்பட்ட அனுபவத்தை கொண்ட அவரது ஆதரவு மற்றும் சுதந்திரம் காரணமாகவே இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடுவதாக ரகானே தெரிவித்திருந்தார். அதனால் அவரது ஆட்டத்தை அருகில் இருந்து பார்த்த தோனிக்கு தற்போதைய ஃபார்ம் மற்றும் எந்தளவில் சிறப்பாக செயல்படுகிறார் என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.

அதன் காரணமாகவே ரகானேவை தேர்வு செய்யலாமா என்பது பற்றி தோனியிடம் தேர்வுக்குழுவினர் கேட்டுள்ளனர். அதற்கு தாமே எதிர்பாராத வகையில் சிறப்பாக செயல்படும் ரகானே இந்தியாவுக்கு மீண்டும் விளையாட தயாராக இருப்பதாக தோனி பரிந்துரைத்துள்ளதால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரபல இணையத்தில் அதிகாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது மட்டுமல்லாமல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்பாக காயமடையும் வீரர்களுக்கு மாற்றாக சர்பராஸ் கான், ருதுராஜ் கைக்வாட், இஷான் கிசான், முகேஷ் குமார், நவ்தீப் சைனி ஆகிய 5 பேர் ஸ்டேண்ட் பை வீரர்களாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:SL vs NZ : அயர்லாந்துக்கு கருணை காட்டாமல் துவம்சம் செய்த இலங்கை – இந்தியாவின் உலக சாதனையை சமன் செய்து மிரட்டல்

இதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத அணிகளில் இடம் பிடிக்கும் வீரர்கள் முன்கூட்டியே இங்கிலாந்துக்கு பயணித்து ஃபைனலுக்கு தயாராகும் வகையில் சில பயிற்சி போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.

Advertisement