அடுத்ததாக சி.எஸ்.கே அணி விளையாட இருக்கும் போட்டியில் தோனி ஓய்வெடுக்க வாய்ப்பு – காரணம் இதுதான்

Dhoni
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி தற்போது 42 வயதை எட்டியுள்ள வேளையில் இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது அவரது கடைசி சீசனாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனுக்கு இறுதியில் அவர் ஓய்வை அறிவித்து அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வி என வலுவான நிலையில் உள்ளது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தோனிக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

ஆனால் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியின் போது பேட்டிங் செய்ய களம் இறங்கிய தோனி 16 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 37 ரன்கள் குவித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 42 வயதிலும் தனது மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி மைதானத்தில் இருந்த ரசிகர்களை உண்மையிலேயே பரவசத்தில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் இந்த சீசனுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் தோனி இந்த ஐபிஎல் தொடரின் ஒரு சில போட்டிகளில் ஓய்வெடுக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே கடந்த போட்டியின் போது தோனியுடன் இளம் வீரரான ஆரவல்லி அவினாஷ்-ம் விக்கெட் கீப்பிங் மேற்கொண்டார். அதோடு டெல்லி அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த போட்டியின் போது கடைசி ஓவரில் தோனி 20 ரன்கள் குவித்து அதிரடி காட்டி இருந்தாலும் அப்போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக போட்டி முடிந்து அவர் சற்று தாங்கி தாங்கி ஓய்வறையை நோக்கி நடந்து வந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் இந்த தொடரின் இடையில் அவர் ஒரு சில போட்டியில் ஓய்வு எடுக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று சன் ரைசர்ஸ் அணிக்கெதிரான நடைபெற இருக்கும் போட்டியில் அவர் ஓய்வெடுத்து கொண்டு அவருக்கு பதிலாக 19 வயதுக்குட்போர் இந்திய அணியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய 18 வயதான ஆரவல்லி அவினாஷ் அறிமுகமாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : திரைப்படமாகும் யுவராஜ் சிங்கின் வாழ்க்கை.. தோனியை ஓரங்கட்டும் வகையில் அவரே வெளியிட்ட 3 மாஸ் அறிவிப்பு

இந்த ஆண்டு தோனி ஓய்வு பெற இருக்கும் வேளையில் நிச்சயம் அடுத்த விக்கெட் கீப்பருக்கான தேடலில் இருக்கும் சென்னை அணிக்கு இவர் ஒரு நல்ல தேர்வாக அமைய அவருக்கு சில வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதனாலும் தோனி ஓய்வு எடுத்துக் கொண்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

Advertisement