
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் கடந்த மே 18-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் விளையாடியிருந்தனர். இந்த போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணியானது நாக் அவுட் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
அந்த போட்டியில் 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கினை துரத்திய சிஎஸ்கே அணி 201 ரன்களை அடித்தால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற சூழல் இருந்தது. அப்போது பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டபோது தோனி யாஸ் தயாள் வீசிய அந்த கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டினார்.
இதனால் நிச்சயம் சென்னை அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த பந்தியிலேயே யாஷ் தயாள் தோனியை ஆட்டமிழக்க வைத்தார். மேலும் எஞ்சியிருந்த நான்கு பந்துகளிலும் அவர் ஒரு பவுண்டரி கூட விட்டுக் கொடுக்கவில்லை. இதன் காரணமாக ஆர்.சி.பி அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்றது.
அந்த போட்டி முடிந்த பிறகு தோனி ஆர்சிபி வீரர்களிடம் கை கொடுக்காமல் சென்றது அப்போதே பேசுபொருளாக மாறியது. பின்னர் விராத் கோலி போட்டி முடிந்த பின்னர் தோனியை சந்தித்து பேசியதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தோனி அந்த போட்டியின் போது தோனி எதிரணி வீரர்களுக்கு கை கொடுக்காதது மட்டுமின்றி கோபத்தில் ஒரு டிவியையும் உடைத்துள்ளதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வகையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : எனக்கு அந்தப் போட்டி முடிந்த பின்னர் ஹர்பஜன் சிங்கிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படிங்க : 29 இன்னிங்ஸ்.. சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த கிங் கோலி.. புதிய உலக சாதனை
அப்போது நான் அவரிடம் தோனி ஏன் ஆர்சிபி வீரர்களுக்கு கை கொடுக்கவில்லை என்று கேட்டேன். உடனே ஹர்பஜன் சிங் என்னிடம் : தோனி கை கொடுக்காமல் மட்டும் செல்லவில்லை. கோபத்தில் ஒரு டிவியை உடைத்தார் என்று என்னிடம் கூறியதாக அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார். மேலும் தோனி அந்தப் போட்டியை தவறவிட்டதால் மிகவும் கோபமாகவும் இருந்ததாகவும் அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.