பழைய பன்னீர்செல்வமாக தெறிக்கவிட்ட தல தோனி, மாஸ் பினிஷிங் ! டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல் சாதனை

MS Dhoni 16
- Advertisement -

மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மார்ச் 31-ஆம் தேதியன்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய அணிகள் முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்தன. மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய சென்னைக்கு தொடக்க வீரர் ருட்ராஜ் கைக்வாட் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

CSK vs LSG

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ராபின் உத்தப்பா உடன் ஜோடி சேர்ந்த மொயின் அலி அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கினார். இந்த ஜோடிகள் இருவருமே ஆரம்பம் முதலே சற்றும் பின்வாங்காமல் அதிரடியாக பேட்டிங் செய்து சென்னைக்கு அபார தொடக்கத்தை அளித்தனர். இவர்களின் அதிரடியான ஆட்டத்தால் பவர்ப்ளே முடிவில் 73/1 ரன்களை எடுத்த சென்னை அதிரடியான தொடக்கத்தை பெற்றது.

மிரட்டிய சென்னை:
இதில் 22 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 35 ரன்கள் எடுத்து மொயின் அலி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சிவம் துபே தனது பங்கிற்கு ஆரம்பம் முதலே லக்னோ பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்க மறுபுறம் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்த ராபின் உத்தப்பா 27 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சர் உட்பட அரைசதம் அடித்த 50 ரன்களில் அவுட்டானார்.

Moin Ali

அடுத்து களமிறங்கிய அம்பத்தி ராயுடு சிவம் துபே உடன் இணைந்து தனது பங்கிற்கு 20 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் முதல் போட்டியில் சொதப்பிய நிலையில் இந்த போட்டியில் அதிரடியை பேட்டிங்கை வெளிப்படுத்திய சிவம் துபே 30 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 49 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

- Advertisement -

தல தோனி மாஸ் பினிசிங்:
அதை தொடர்ந்து எம்எஸ் தோனி களமிறங்கியதை பார்த்து களத்தில் இருந்த ரசிகர்கள் சிவம் துபே அவுட்டானதை நினைத்து வருத்தப்படாமல் ஆரவாரத்துடன் கூடிய கரக்கோஷங்களை எழுப்பிய நிலையில் களமிறங்கிய தோனி லக்னோ பவுலர் அவேஷ் கான் வீசிய முதல் பந்திலேயே மெகா சிக்சரை பறக்க விட்டு ரசிகர்களை எழுந்து நின்று துள்ளி குதிக்க வைத்தார். அடுத்த பந்திலேயே பவுண்டரி தெறிக்கவிட்ட அவரின் பேட்டில் அனல் பறந்தது என்றே கூறலாம்.

MS Dhoni 16

இதற்கு இடையில் அவருடன் விளையாடிய புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா 9 பந்துகளில் 3 பவுண்டரி உட்பட 17 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த பிரெடோரியஸ் முதல் பந்திலேயே டக் அவுட்டானாலும் 20-வது ஓவரின் கடைசி பந்தில் மீண்டும் ஒரு மின்னல் வேகக் பவுண்டரியை பறக்கவிட்ட எம்எஸ் தோனி வெறும் 6 பந்தில் 16* ரன்களை குவித்து மாஸ் பினிசிங் கொடுத்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்த சென்னை 210 ரன்களை விளாசியது.

- Advertisement -

முன்னதாக கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த அடுத்தடுத்த ஐபிஎல் தொடர்களில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வந்த அவர் இந்த வருடத்தின் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே சென்னை 62/5 எனக்கு திண்டாடிய போது வெறும் 38 பந்துகளில் 50* ரன்களை விளாசி தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பார்முக்கு திரும்பினார். அந்த நிலையில் இன்று நடைபெற்ற லக்னோக்கு எதிரான போட்டியிலும் வெறும் 6 பந்தில் 16* ரன்களை தெறிக்கவிட்ட அவர் 2019-க்கு முன் எப்படி கடைசி நேரத்தில் களமிறங்கி எதிரணி பவுலர்களை பந்தாடினாரோ அதே போலவே அதே பழைய பன்னீர்செல்வமாக அதே பழைய தோனியாக மாறி ரன்கள் அடிக்க தொடங்கியதை பார்த்த அவரின் ரசிகர்கள் மிகுந்த உணர்ச்சிக்கு உள்ளாக்கினார்கள்.

MS Dhoni 2022 IPL

இப்போட்டியில் 16 ரன்களை அடித்த அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த 6-வது இந்திய வீரர் என்ற மைல்கல் சாதனையையும் எட்டினார். இந்த பட்டியலில் இடம் வகிக்கும் எஞ்சிய இந்திய வீரர்கள் அனைவரும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருக்கும் நிலையில் தோனி தான் முதல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இணைந்துள்ளார் என்பது அவரின் தரத்தையும் திறமைமையையும் காட்டுகிறது.

இதையும் படிங்க : ராபின் உத்தப்பாவை ஏன் சி.எஸ்.கே எடுத்தாங்கனு இப்போ தெரியுதா ? – லக்னோ அணிக்கெதிராக நடந்தது என்ன?

டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் இதோ:
1. விராட் கோலி : 10326 ரன்கள்
2. ரோஹித் சர்மா : 9936 ரன்கள்
3. ஷிகர் தவான் : 8818 ரன்கள்
4. சுரேஷ் ரெய்னா : 8654 ரன்கள்
5. ராபின் உத்தப்பா : 7120 ரன்கள்
6. எம்எஸ் தோனி : 7000* ரன்கள்

Advertisement