ராபின் உத்தப்பாவை ஏன் சி.எஸ்.கே எடுத்தாங்கனு இப்போ தெரியுதா ? – லக்னோ அணிக்கெதிராக நடந்தது என்ன?

Uthappa-2
- Advertisement -

இந்தியாவில் மார்ச் 26-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் 15வது ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியை எதிர்த்து மோசமான தோல்வியை தழுவி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே அணி மீண்டும் பலமாக திரும்பி வரும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இன்று நடைபெற்று வரும் இந்த இரண்டாவது லீக் போட்டியில் சிஎஸ்கே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.

Sheldon-Jackson

- Advertisement -

ஏனெனில் முதலாவது போட்டியில் பேட்டிங்கில் மோசமாக சொதப்பிய சிஎஸ்கே அணி சில விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் இன்று மீண்டு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய சென்னை அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி அணி விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர் உத்தப்பா தான் சிஎஸ்கே அணிக்காக ஏன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை நிரூபிக்கும் வகையில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

uthappa 1

அதாவது இன்றைய போட்டியில் துவக்க வீரரான கெய்க்வாட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியதும் மறுபுறம் கான்வேவிற்கு பதிலாக இன்று மாற்று துவக்க வீரராக களமிறங்கிய உத்தப்பா 27 பந்துகளை சந்தித்த நிலையில் 8 பவுண்டரி ஒரு சிக்சர் என 185 ஸ்ட்ரைக் ரேட் உடன் 50 ரன்களை குவித்து அசத்தினார்.

- Advertisement -

ஏற்கனவே கடந்த ஆண்டு ஆரம்பத்தில் சில போட்டிகளில் வாய்ப்பு இல்லாமல் வெளியில் அமர்ந்திருந்த உத்தப்பா ரெய்னாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம்பெற்றார் அதனை தொடர்ந்து பிளேஆப் போட்டிகள், இறுதிப்போட்டி என அசத்தியிருந்த உத்தப்பா இன்று மீண்டும் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான ஆட்டத்தை காண்பித்தார்.

இதையும் படிங்க : யாரு ப்பா இவரு? இதுவரை யாரும் பார்த்திடாத வீரருக்கு அறிமுக வாய்ப்பு அளித்த சி.எஸ்.கே – யார் அந்த வீரர்?

அவரது இந்த ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் தனது பழைய இடத்திற்கே உத்தப்பா வந்து விட்டார் என்றும் இதனால் தான் அவரை சிஎஸ்கே அணி தேர்வு செய்தது என்றும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமின்றி 50 ரன்களில் உத்தப்பா எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்து வெளியிடப்பட்டது.

Advertisement