யாரு ப்பா இவரு? இதுவரை யாரும் பார்த்திடாத வீரருக்கு அறிமுக வாய்ப்பு அளித்த சி.எஸ்.கே – யார் அந்த வீரர்?

Bravo
- Advertisement -

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இருந்தே தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் தோல்விக்கு முக்கிய காரணமாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Dhoni

- Advertisement -

ஏனெனில் துவக்கத்திலேயே அதிகப்படியான விக்கெட்டுகளை சென்னை அணி இழந்ததால் அந்த சரிவில் இருந்து மீள முடியாமல் இறுதிவரை போராடியது. 131 ரன்களை மட்டுமே முதல் போட்டியில் குவித்ததால் அந்த ஒரு சொதப்பலே தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இன்று லக்னோ அணிக்கு எதிராக தற்போது மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது.

இந்த இரண்டாவது போட்டியில் சென்னை அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதலாவது போட்டியின்போது குவாரன்டைன் காரணமாக விளையாடும் வாய்ப்பை இழந்த மொயின் அலி இந்த போட்டியில் வாய்ப்பைப் பெற்றார். அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னேவிற்கு பதிலாக பிரிட்டோரியஸ் அணியில் இணைந்தார்.

mukesh choudhary

மேலும் மற்றும் ஒரு முக்கிய மாற்றமாக துவக்க வீரர் டேவான் கான்வேவிற்கு பதிலாக கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் சவுத்ரி என்பவருக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் குறிப்பிட வேண்டிய விடயம் யாதெனில் 25 வயதான முகேஷ் சவுத்ரி இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் இல்லாதவர்.

- Advertisement -

ஆனாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்டிர அணிக்காக கடந்த 2017ம் ஆண்டு முதல் விளையாடி வரும் அவர் தற்போது முதல் முறையாக சிஎஸ்கே அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்று உள்ளதால் இந்த வீரரைப் பற்றி பெரியளவில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பயிற்சி போட்டிகளில் இவர் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக இவர் அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இந்தாண்டு ஐ.பி.எல் தொடரை ஜெயிக்கப்போவது இந்த டீம் தான் – மேத்யூ ஹைடன் ஓபன்டாக்

நிச்சயம் இவரை போன்ற இளம் வீரர்களுக்கு சென்னையில் சரியான வழிகாட்டுதலை கிடைக்கும் என்பதால் இவரின் மீது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement