இந்தாண்டு ஐ.பி.எல் தொடரை ஜெயிக்கப்போவது இந்த டீம் தான் – மேத்யூ ஹைடன் ஓபன்டாக்

Hayden
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 10 அணிளுடன் நடைபெற்று வரும் இந்த தொடரானது பிரமாண்டமான முறையில் நடைபெற்று வருவதால் அனைத்து அணிகளுமே சரிசமமான பலத்தை காட்டி வருகின்றன. இதன் காரணமாக எந்த ஒரு அணியையும் முன்கூட்டியே வெற்றி பெறும் என்று கணிப்பது கடினமாக இருந்து வருகிறது. மேலும் வெற்றிக்காக அனைத்து அணிகளும் கடுமையான போராட்டத்தை அளித்து வருகின்றனர்.

kkrvscsk

- Advertisement -

இதன் காரணமாக ஒவ்வொரு போட்டியும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வர தற்போது சென்னை அணியின் முன்னாள் வீரரான ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹெய்டன் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற போகும் அணி எது என்பது குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை சென்னை அணியின் தொடக்க வீரராக இருந்த மேத்யூ ஹெய்டன் இந்த ஐபிஎல் தொடர் குறித்து பேசுகையில் : இந்த ஆண்டு நடப்புச் சாம்பியனான சென்னை அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்து இருக்கலாம். ஆனாலும் இந்த ஒரு தோல்வியை சிஎஸ்கே அணியை பெரிய அளவில் சோர்ந்து போகச் செய்யாது.

Dhoni

ஏனெனில் சென்னை அணியின் டாப் ஆர்டர் விரைவிலேயே ஆட்டம் இழந்து விட்டதால் கடந்த போட்டியில் தோல்வி ஏற்பட்டது. ஆனால் நிச்சயம் சென்னை அணியில் உள்ள அனுபவ வீரர்கள் இனி வரும் போட்டிகளில் வலுவாக கம்பேக் கொடுப்பார்கள். இதன் காரணமாக நிச்சயம் சென்னை அணி மீண்டும் அதே பலத்துடன் திரும்பும்.

- Advertisement -

மேலும் முதல் போட்டியில் மொயின் அலி விளையாட முடியாமல் போனது பெரிய பின்னடைவாக இருந்தது, இனி வரும் போட்டிகளில் அவரும் சென்னை அணியுடன் இணைவார் என்பதனால் நிச்சயம் சென்னை அணி மீண்டும் பலமான அணியாக மாறும். என்னை பொறுத்தவரை இந்த ஆண்டும் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற சென்னை அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என்றும் ஹைடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தர்ம சங்கடம் தான் ஆனால் என்ன செய்வது? வளர்த்த தமிழக வீரரை ஸ்லெட்ஜ்சிங் செய்ய தயாரான தினேஷ் கார்த்திக்

முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்த சென்னை அணியானது இன்று கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement