500 ஸ்ட்ரைக் ரேட்டில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட தோனி.. 17 வருட ஐபிஎல் வரலாற்றில் அரிதான சாதனை

Dhoni 6
- Advertisement -

வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரின் 29வது லீக் போட்டியில் மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை வீழ்த்தியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் 69, சிவம் துபே 66*, தோனி 20* ரன்கள் எடுத்த உதவியுடன் 207 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதைத் துரத்திய மும்பைக்கு முன்னால் கேப்டன் ரோகித் சர்மா முடிந்தளவுக்கு போராடி கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்து 105* (63) ரன்கள் விளாசி போராடினார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் பாண்டியா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா போன்ற இதர வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதனால் 20 ஓவரில் 186/6 ரன்களுக்கு மும்பையை கட்டுப்படுத்தி வென்ற சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

தோனியின் சாதனை:
முன்னதாக இந்த வருடம் கேப்டன்ஷிப் பொறுப்பை வருங்காலத்தை கருத்தில் கொண்டு ருதுராஜ் கையில் படைத்துள்ள தோனி சாதாரண விக்கெட் கீப்பராக 8வது இடத்தில் பேட்டிங் செய்து வருகிறார். அதனால் அரிதாகவே பேட்டிங் செய்யும் அவர் இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் கடைசி 4 பந்துகளை எதிர்கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

அந்த வாய்ப்பில் 6, 6, 6 என அடுத்தடுத்த ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய அவர் கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தார். அந்த வகையில் 20* (4) ரன்களை 500.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அவர் ஐபிஎல் தொடரில் குறைந்தபட்சம் 20 ரன்கள் அடித்த ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை கொண்ட வீரர் என்ற க்ருனால் பாண்டியா சாதனையை சமன் செய்தார்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2020 சீசனில் க்ருனால் பாண்டியா ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் இதே போல 4 பந்தில் 20 ரன்கள் எடுத்திருந்தார். அதை விட இப்போட்டியில் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளில் தோனி 3 அடுத்தடுத்த சிக்சர்கள் அடித்தார். அதன் வாயிலாக 17 வருட ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளிலும் 3 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையையும் தோனி படைத்துள்ளார்.

இதையும் படிங்க: குட்டி மும்பை பெண் ரசிகைக்காக தல தோனி கொடுத்த பரிசு.. பாராட்டிய ஜாம்பவான் சச்சின்.. வான்கடேவில் நெகிழ்ச்சி

இதற்கு முன் கொல்கத்தாவுக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரேன் 2021 ஐபிஎல் தொடரில் சார்ஜாவில் நடந்த போட்டியில் டேன் கிறிஸ்டனுக்கு எதிராக தனது முதல் 3 பந்துகளில் 3 சிக்சர்கள் அடித்தார். அதே போல 2023இல் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் லக்னோவுக்காக அபிஷேக் சர்மாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் முதல் 3 பந்துகளில் சிக்ஸர் அடித்தார். தற்போது தோனி முதல் இந்திய வீரராக அந்த அரிதான சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement