IND vs AUS : 3 ஆவது போட்டிக்கு முன்பாக ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு ஆலோசனை வழங்கிய – எம்.எஸ்.தோனி

Hardik-Pandya-and-Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் சமநிலை வகிக்கின்றன. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND-vs-AUS

- Advertisement -

இதன் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதனால் இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கடைசி போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுமே கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தளிக்கும் என்றே கூறலாம். இந்நிலையில் தற்போது இந்த மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக எம்எஸ் தோனி நேரடியாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Virat Kohli

அந்த வகையில் ஐபிஎல் தொடருக்காக தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த இரு வாரங்களாக பயிற்சி மேற்கொண்டு வரும் சி.எஸ்.கே அணியின் கேப்டன் தோனி மைதானம் எவ்வாறு இருக்கிறது? பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கலாம்? இந்த போட்டியை எவ்வாறு திட்டமிடலாம் என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகளை அவர்கள் இருவரிடமும் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

- Advertisement -

மேலும் சென்னை பிட்ச் எப்போதும் ஸ்லோவான ஆடுகளம் என்பதால் சுழற்ப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறியுள்ளாராம். அதேபோன்று ஒருநாள் போட்டிக்கான மைதானத்தின் தற்போதைய தன்மை குறித்தும் தோனி ரோகித் சர்மாவிடம் தெளிவாக கூறியிருக்கிறாராம்.

இதையும் படிங்க : எல்லாரும் தப்பா நினைச்சுட்டாங்க, சின்ன வயசுல இருந்தே அவர தெரியும் நான் எல்லை மீறி பேசல – வெங்கடேஷ் பிரசாத்

அவரது அறிவுரைகளின் படியே நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் களமிறங்குவார்கள் என்று தெரிகிறது. நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement