தோனியால் தடகளத்தை விட்டு கிரிக்கெட் விளையாட வந்த வீராங்கனை. அதிரடியில் அசத்தும் – ருசிகர பின்னணி

Kiran Navgire
- Advertisement -

இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் கேப்டன் எம்எஸ் தோனி அதிரடியாக பேட்டிங் செய்யும் பினிஷெர், மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யும் விக்கெட் கீப்பர், இந்தியாவிற்காக 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற முதல் மற்றும் ஒரே கேப்டன் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர். கிரிக்கெட் பிரபலமில்லாத ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிறிய ஊரில் பிறந்து கிரிக்கெட் மீது இருந்த காதலால் ரயில்வே பணியை விட்டுவிட்டு உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு இந்தியாவிற்காக விளையாடி உலகக்கோப்பையை வென்று கொடுத்த அவர் பல இளம் வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

Dhoni

- Advertisement -

அந்த வரிசையில் நாகாலாந்தை சேர்ந்த சோலாப்பூர் எனும் சிறிய ஊரைச் சேர்ந்த 28 வயது இளம் வீராங்கனை கிரண் நவ்கிர் தோனியை பார்த்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளதை பற்றி பார்ப்போம். இந்திய கிரிக்கெட் இன்று உலக அரங்கில் கொடிகட்டிப் பறப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக ஐபிஎல் தொடர் அமைந்துள்ளது. இருப்பினும் இந்திய மகளிர் கிரிக்கெட் மட்டும் இன்னும் 90 களில் ஆடவர் அணி எப்படி இருந்ததோ அதேபோல் தரைமட்டத்தில் இருந்து வருகிறது. அதை முன்னேற்றுவதற்காகவே 2023இல் மகளிர் ஐபிஎல் நடைபெறும் என தெரிவித்துள்ள பிசிசிஐ அதற்கு முன்னோட்டமாக தற்போது மகளிர் டி20 சேலஞ்ச் தொடரை நடத்தி வருகிறது.

சரவெடி பேட்டிங்:
இந்த தொடரின் லீக் சுற்றில் பங்கேற்கும் 3 அணிகளும் தலா 2 போட்டிகளில் மோத வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்கனவே 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மே 26இல் நடந்த 3-வது லீக் போட்டியில் ட்ரெயில் பிளேசர்ஸ் மற்றும் வேலோசிட்டி ஆகிய அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த டிரெயில் பிளேசர்ஸ் 20 ஓவர்களில் அதிரடியாக 190/5 ரன்கள் சேர்த்தது அந்த அணிக்கு அதிகப் பட்சமாக சபீனேனி 73 (47) ரன்களும் ஜெமிமா ரோடிரிக்கஸ் 66 (44) ரன்களும் விளாசினர். அதை தொடர்ந்து 191 என்ற கடினமான இலக்கை துரத்திய வேலோசிட்டி அணிக்கு ஷபாலி வர்மா 29 (15) யஸ்டிக்கா பாட்டியா 19 (15) லாரா ஒள்வார்டட் 17 (16) என 3 ஸ்டார் வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

1. இருப்பினும் முதல் முறையாக தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய கிரண் நவ்கிர் 3-வது இடத்தில் களமிறங்கி எதிரணி பவுலர்களை சரமாரியாக அடித்தார்.

- Advertisement -

2. அதிலும் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்ட அவர் வெறும் 25 பந்துகளில் அரைசதம் கடந்து மகளிர் ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீராங்கனை என்ற அட்டகாசமான சாதனை படைத்தார். முதல் பந்தில் சிக்சருடன் தொடங்கிய அவர் அரை சதத்தையும் சிக்ஸர் அடித்து தொட்டது பல ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

மொத்தம் 5 பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் பறக்க விட்ட அவர் அறிமுக போட்டியிலேயே 69 (34) ரன்களை 202.94 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் குவித்து வெற்றிக்காக போராடிய போதிலும் கடைசி நேரத்தில் வந்த வீராங்கனைகள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 20 ஓவர்களில் 174/9 ரன்கள் மட்டுமே எடுத்த வேலோசிட்டி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

தோனியின் 2011 சிக்ஸர்:
இருப்பினும் தனது முதல் போட்டியில் பெரிய வெற்றியை பெற்றிருந்ததால் தப்பிய அந்த அணி புள்ளிப் பட்டியலில் ரன்ரேட் அடிப்படையில் 2-வது இடத்தைப் பிடித்து மே 28இல் நடைபெறும் இறுதிப்போட்டியில் சூப்பர்நோவாஸ் அணியுடன் மோத தகுதி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் வெலோசிட்டி பைனலுக்கு செல்ல அறிமுகப் போட்டியில் மிரட்டிய கிரண் நவ்கிர் தான் முக்கிய காரணமாக திகழ்ந்ததால் ஆட்ட நாயகி விருதை வென்றார்.

நாகாலத்தைச் சேர்ந்த இவர் பள்ளி கால கட்டங்களில் கோ – கோ, கபடி போன்ற தடகளப் போட்டிகளில் மாநில அளவில் விளையாடி வந்தார். அப்போது 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் 91* ரன்கள் விளாசி இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுத்த தோனியை பார்த்துதான் கிரிக்கெட் விளையாட துவங்கியதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதிலும் அவர் அடித்த அந்த கடைசி சிக்சர் தான் பேட்டை கையிலெக்க வைத்ததாக கூறியுள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்த பின் அவர் பேசியது பின்வருமாறு. “2011 உலக கோப்பை இறுதி போட்டியில் தோனி சார் சிக்ஸர் அடித்தது என்னை மிகவும் கவர்ந்து எனது மனதில் தொடர்ச்சியான எண்ணங்களை ஏற்படுத்தியது. அந்த குறிப்பிட்ட சிக்சர் எனக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. ஒவ்வொரு போட்டியிலும் அதுபோன்ற சிக்சர் அடிக்க வேண்டுமென்ற எண்ணத்தைக் கொடுக்கிறது”

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணியின் பவுலரான இவருக்கு 14-15 கோடி சம்பளம் குடுக்கலாம் – சேவாக் பாராட்டு

“டாட் பந்துகளை விளையாட எனக்கு சுத்தமாக பிடிக்காது. எனவே ஒவ்வொரு பந்திலும் ஏதேனும் அதிரடியாக அடிக்க வேண்டும் என்று நினைத்ததால் எனக்கு நல்ல ஸ்கோர் கிடைத்தது. என்னுடைய பேட்டிங் அதிரடியான ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். நான் அடிக்க விரும்பும் இடத்தில் நல்ல பந்துகளை வீசினால் கூட நிச்சயம் சிக்ஸராக அடிப்பேன்” என்று தெரிவித்தது தோனியின் ரசிகர்களை பெருமை அடைய வைப்பதாக உள்ளது.

Advertisement