ஆர்.சி.பி அணியின் பவுலரான இவருக்கு 14-15 கோடி சம்பளம் குடுக்கலாம் – சேவாக் பாராட்டு

virender sehwag
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கப் போகும் பிளே ஆஃப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதில் மே 25இல் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3, 4 ஆகிய இடங்களைப் பிடித்த லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்த பெங்களூரு மே 27இல் நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் காத்திருக்கும் ராஜஸ்தானுடன் மோதுவதற்கு தகுதி பெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவர்களில் அதிரடியாக 207/4 ரன்கள் சேர்த்தது.

patidar 1

அந்த அணிக்கு கேப்டன் டுப்லஸ்ஸிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் போன்ற முக்கிய நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் அற்புதமாக பேட்டிங் செய்த இளம் வீரர் ரஜத் படிடார் முதல் ஓவரிலிருந்து கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டல் பேட்டிங்கை வெளிப்படுத்தி 12 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 112* (54) ரன்கள் விளாசி எலிமினேட்டர் போட்டியில் சதமடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார்.

- Advertisement -

அசத்திய ஹர்ஷல்:
அதை தொடர்ந்து 208 என்ற கடினமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் 79 (58) ரன்களும் தீபக் ஹூடா 45 (21) ரன்களும் எடுத்து போராடினாலும் இதர பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தவறியதால் 20 ஓவர்களில் 193/6 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி பரிதாபமாக தோற்று ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. இந்த வெற்றிக்கு 112* ரன்கள் விளாசி முக்கிய பங்காற்றிய ரஜத் படிதார் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஆனால் 3 விக்கெட் எடுத்த ஹேசல்வுட் உட்பட இதர பெங்களூரு பவுலர்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில் 4 ஓவர்களில் 25 ரன்களை மட்டும் கொடுத்து 6.25 என்ற துல்லியமான எக்கனாமியில் வீசிய ஹர்ஷல் படேல் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார் என்றே கூறலாம்.

Harshal Patel vs LSG

அதிலும் 79 ரன்கள் எடுத்து வெற்றி போராடிக்கொண்டிருந்த கேஎல் ராகுலை பினிஷிங் செய்ய முடியாத அளவுக்கு 18-வது ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் விக்கெட் உட்பட 8 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து கடைசி நேரத்தில் அட்டகாசமாக பந்துவீசி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதற்கு முந்தைய போட்டியில் காயத்தால் விலகிய அவர் இந்த வாழ்வா – சாவா எலிமினேட்டர் போட்டியில் அதை பொருட்படுத்தாமல் வலியுடன் பெங்களூருவுக்காக மிகச் சிறப்பாக பந்து வீசியதால் கேப்டன் டுப்லஸ்ஸிஸ் உட்பட பலரும் அவரை பாராட்டினர்.

- Advertisement -

20 முதல் 10.75 கோடி:
கடந்த 2012 முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி போன்ற அணிகளுக்காக சுமாராக விளையாடி வந்த அவர் கடந்த 2021இல் முதல் முறையாக பெங்களூரு அணிக்கு 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். அந்த சீசனில் அபாரமாக பந்துவீசிய அவர் ஹாட்ரிக் உட்பட 15 போட்டிகளில் 32 விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை வென்று அதன் வாயிலாக இந்தியாவிற்கு விளையாடும் அளவுக்கு உயர்ந்தார். அதன் காரணத்தால் இந்த வருடம் மீண்டும் அவரை 10.75 கோடி என்ற பெரிய தொகைக்கு போட்டிபோட்டு பெங்களூரு அணி நிர்வாகம் வாங்கியது.

Harshal

கடந்த சீசனில் 8.14 என்ற எக்கனாமியில் பந்து வீசிய அவர் இந்த வருடம் அதைவிட 7.57 என்ற கச்சிதமான எக்கனாமியில் பந்துவீசி அசத்தி வருகிறார். அதிலும் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர்கள் பறக்க விட துடிக்கும் கடைசி கட்ட ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்க முடியாத அளவுக்கு அற்புதமாக பந்து வீசுகிறார். இப்படிப்பட்ட இவருக்கு 10.75 கோடி என்பது குறைவான சம்பளம் என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் 14 – 15 கோடிக்கு ஹர்ஷல் படேல் தகுதியானவர் என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஒர்த் பவுலர்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “10 கோடிக்கு வாங்கிப்பட்ட ராகுல் திவாடியா தனது குஜராத் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்ததால் அதற்கு தகுதியானவர் என்று பேசுகிறோம். ஆனால் பெங்களூர் அணிக்காக பந்து வீசும் விதத்தில் ஹர்ஷல் படேல் விலைமதிப்பு இன்னும் குறைவாகவே உள்ளது. எனவே 10.75 கோடி அவருக்கு குறைவானது என்று நினைக்கிறேன். அவர் 14 – 15 கோடி விலைப் பட்டியலில் இருக்க வேண்டியவர்”

இதையும் படிங்க : ஐபிஎல் தொடருக்காக திருமணத்தை தள்ளி போட்ட ஆர்சிபி இளம் வீரர் – வெளியான சுவாரசிய தகவல்

“அவர் கடைசி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட் எடுத்து போட்டியை பாதுகாக்கிறார். ஆரம்ப கட்ட ஓவர்களிலும் குறைந்த ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகள் எடுக்கிறார். எனவே அந்தப் பெரிய தொகைக்கு அவர் தகுதியானவர் என்று கருதுகிறேன். தற்போது பெங்களூரு குவாலிபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் அவருக்கு அந்த அணி நிர்வாகம் தாராளமாக ஏதேனும் போனஸ் வழங்கலாம்” என்று தெரிவித்தார்.

Advertisement