- Advertisement -
இந்திய கிரிக்கெட்

4 ஃபோர்ஸ் 6 சிக்ஸ்.. செமி ஃபைனலில் ரஜத் படிடார் அபாரம்.. ஆர்சிபி ரசிகர்கள் ஹேப்பி.. ஃபைனலில் யார்?

இந்தியாவில் சயீத் முஷ்டாக் அலி 2024 உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை தொட்டுள்ளது. அதில் டிசம்பர் 13ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற இரண்டாவது செமி ஃபைனலில் டெல்லி மற்றும் மத்தியப்பிரதேச அதிகம் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மத்திய பிரதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை அடுத்து களம் இறங்கிய டெல்லி 20 ஓவரில் கடினமாக போராடியும் 146-5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ப்ரியன்ஸ் 29, அனுஜ் ராவத் 33*, மயங் ராவத் 24* ரன்கள் எடுத்தார்கள். மத்திய பிரதேச அணிக்கு அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 2 ஓவரில் 12 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

ரஜத் படிடார் அபாரம்:

அதைத் தொடர்ந்து 147 ரன்களை துரத்திய மத்திய பிரதேச அணிக்கு அர்பிட் கௌட் கோல்டன் டக் அவுட்டானார். அவரை அவுட்டாக்கிய மூத்த வீரர் இஷாந்த் சர்மா அடுத்ததாக வந்த சேனாதிபதியை 7 ரன்களில் காலி செய்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஹர்ஷ் கௌலி அதிரடியான 30 (18) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்ததாக வந்த கேப்டன் ரஜத் படிடார் அதிரடியாக விளையாடினார்.

மிடில் ஓவர்களில் பட்டாசாக பேட்டிங் செய்த அவர் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 66* (29) ரன்களை 227.59 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஹர்ப்ரீத் சிங் பாட்டியா 46* (38) ரன்கள் விளாசினார். அதனால் 15.4 ஓவரில் 152-3 ரன்கள் குவித்த மத்திய பிரதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று டெல்லியை நாக் அவுட் செய்து ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி:

இந்த வெற்றிக்கு 66* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ரஜத் படிடார் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஐபிஎல் தொடரில் 2022 சீசனில் எலிமினேட்டர் போட்டியில் மிரட்டலான சதமடித்த அவர் பெங்களூரு அணியை தனியாளாக குவாலிஃபயர் 2 போட்டிக்கு தகுதி பெற வைத்தார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் எலிமினேட்டர் போட்டியில் அதிவேகமான சதமடித்த (49 பந்துகள்) முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார்.

இதையும் படிங்க: தகுதியான பிளேயர்.. இந்திய அணி நிதிஷ் ரெட்டிக்கு இந்த வாய்ப்பு கொடுக்கனும்.. கில்கிறிஸ்ட் பேட்டி

அதன் காரணமான 2025 ஐபிஎல் தொடரில் மீண்டும் அவரை பெங்களூரு அணி வாங்கியுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இப்போட்டியில் அவருடைய ஆட்டம் பெங்களூரு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்ததாக அமைகிறது. இதை அடுத்து 2024 சயீத் முஷ்டாக் அலி கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டியில் மும்பை – மத்திய பிரதேசம் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

- Advertisement -