தகுதியான பிளேயர்.. இந்திய அணி நிதிஷ் ரெட்டிக்கு இந்த வாய்ப்பு கொடுக்கனும்.. கில்கிறிஸ்ட் பேட்டி

Adam Gilchirst 2
- Advertisement -

நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது. இதை அடுத்து அந்தத் தொடரின் 3வது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் இருக்கும் காபா மைதானத்தில் துவங்குகிறது.

முன்னதாக அந்தத் தொடரில் இளம் வீரர் நித்திஷ் ரெட்டி சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவுக்காக அறிமுகமானார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரியளவில் அசத்தாக அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது விமர்சனங்களை எழுப்பியது. ஆனால் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் 41 ரன்கள் அடித்த அவர் 2வது இன்னிங்ஸில் 38* ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

அசத்தும் நிதிஷ்:

அதே போல இரண்டாவது போட்டியில் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் திண்டாடிய நிலையில் அவர் மட்டும் அதிகபட்சமாக தலா 42 ரன்கள் குவித்தார். அந்த வகையில் தன்னுடைய தேர்வை நியாயமாக்கியுள்ள நித்திஷ் ரெட்டி 2 விக்கெட்டுகளையும் எடுத்து வருங்கால ஆல் ரவுண்டராக தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நித்திஷ் ரெட்டியை இந்திய அணி பேட்டிங் வரிசையில் 6வது இடத்தில் களமிறக்கி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நிதிஷ் ரெட்டி எல்லாவற்றிலும் கேட்கப்பட்ட டெஸ்ட் வீரராக ஒவ்வொரு அங்குலத்திலும் தோற்றமளிக்கிறார். 2 போட்டிகளில் அவர் 2 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். 2 போட்டிகளிலுமே தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் பவுண்டரிகளை அடித்து அதிரடியாகவும் பேட்டிங் செய்தார்”

- Advertisement -

கில்கிறிஸ்ட் பாராட்டு:

“முதல் போட்டியில் அவர் விராட் கோலியுடன் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். இரண்டாவது போட்டியில் தடுப்பாட்டத்தை பயன்படுத்தி அவர் நிதானமாக விளையாடினார். அதே சமயம் தேவைப்படும் போது அதிரடியாக விளையாடிய அவரிடம் நீண்ட நேரம் அசத்துவதற்கு தேவையான பொறுமை இருக்கிறது. எனவே தற்போது விளையாடும் இடத்தை விட அவர் பேட்டிங் வரிசையில் இன்னும் கொஞ்சம் மேலே சென்று விளையாடலாம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: நம்ப முடியல.. இந்த திட்டத்தை வெச்சு டிராவிஸ் ஹெட்டை இந்தியா அவுட்டாக்கலாம்.. கில்கிறிஸ்ட் ஆலோசனை

அவர் கூறுவது போல பேட்டிங்கில் கொஞ்சம் மேலே விளையாடினால் நித்திஷ் ரெட்டி இன்னும் அதிக நேரம் பேட்டிங் செய்து சதத்தை அடிப்பதற்கு கூட வாய்ப்பு கிடைக்கலாம். இருப்பினும் ரிஷப் பண்ட்க்கு பதிலாக அவரை இந்திய அணி மேலே களம் இறக்குவது கொஞ்சம் கடினமாகும். இந்த நிலையில் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற கடைசி 3 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement