TNPL 2023 : கடைசி பந்தில் திருப்பூரை வீழ்த்தி நூலிழையில் நாக் அவுட் சென்ற மதுரை – பிளே ஆஃப் சுற்றில் மோதும் அணிகள் விவரம் இதோ

TNPL 27
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்ற வரும் 2023 டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஜூலை 4ஆம் தேதி இரவு 7.15 மணிக்கு நடைபெற்ற 17வது லீக் போட்டியில் மதுரை பேந்தர்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்தப் போட்டியில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் மதுரை களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற திருப்பூர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய மதுரைக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி 9 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ஹரி நிஷாந்த் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 34 (27) ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அந்த நிலைமையில் மறுபுறம் அசத்திய மற்றொரு தொடக்க வீரர் லோகேஸ்வர் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 44 (37) ரன்கள் எடுத்து அவுட்டாக அடுத்ததாக வந்த ஆதித்யா 5 பவுண்டரிகளுடன் 37 (28) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்படி டாப் 3 பேட்ஸ்மேன்கள் 135க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி ஏற்படுத்திய அழுத்தத்தால் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட தடுமாறிய மதுரைக்கு ஸ்வப்னில் சிங் 17 (15) கௌஷிக் 11 (9) அபிஷேக் 0 (1) சரவணன் 8* (3) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களையே எடுத்தனர்.

- Advertisement -

மதுரை மாஸ் வெற்றி:
அதனால் 20 ஓவர்களில் மதுரை 160/5 ரன்கள் எடுத்த நிலையில் திருப்பூர் சார்பில் அதிகபட்சமாக திரிலோக் நாக் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 161 என்ற சுலபமான இலக்கை துரத்திய திருப்பூருக்கு 43 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷாப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த போதிலும் மெதுவாக விளையாடிய வைசால் வைத்தியா 21 (23) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அந்த நிலைமையில் வந்த ராஜேந்திரன் விவேக் மேலும் தடுமாறி 11 (15) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் துஷார் ரஹீஜா 6 பவுண்டரி 1 சிக்சருடன் 51 (41) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் டாப் 3 பேட்ஸ்மேன்களும் தடுமாற்றமாக விளையாடியதால் 16 ஓவர் முடிவில் 111 ரன்களை மட்டுமே எடுத்த திருப்பூர் வெற்றி பெற கடைசி 4 ஓவரில் 51 ரன்கள் தேவைப்பட்டது. அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் விஜய் சங்கர் அதிரடியாக விளையாட முயற்சித்து 28 (22) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

அதன் காரணமாக கடைசி 2 ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சதுர்வேத் 1 (3) ரன்னில் அவுட்டானதால் குர்ஜப்நீத் சிங் வீசிய கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட போது புவனேஸ்வரன் முதலிரண்டு பந்துகளில் சிக்சரையும் பவுண்டரியும் அடித்து 3வது பந்தில் சிங்கிள் எடுத்தார். ஆனால் 4வது பந்தில் பாலச்சந்தர் அனிருத் 11 (8) ரன்களில் அவுட்டாக 5வது பந்தில் அடுத்து வந்த கோகுல் மூர்த்தி சிங்கிள் எடுத்தார்.

அதனால் பரபரப்பு ஏற்பட்ட அந்த போட்டியில் 18* (7) ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்த புவனேஸ்வரன் கடைசி பந்தில் ரன்கள் எடுக்க தவறினார். அதன் காரணமாக வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற மதுரை லீக் சுற்றில் முடிவில் 7 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தை பிடித்தது. அதன் காரணமாக பிளே ஆப் சுற்றுக்கு 4வது அணியாக வீரத்துடன் தகுதி பெற்ற மதுரைக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக குர்ஜப்நீத் சிங் மற்றும் அஜய் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியின் முக்கிய பங்காற்றினர்.

இதையும் படிங்க:2023 உ.கோ குவாலிபயரில் மெகா ட்விஸ்ட் : ஜிம்பாப்வேயை வீட்டுக்கு அனுப்பிய ஸ்காட்லாந்து – ஃபைனலுக்கு செல்லப்போவது யார்?

மறுபுறம் 7 போட்டிகளில் 5வது தோல்வியை சந்தித்த திருப்பூர் இத்தொடரிலிருந்து வெளியேறியது. மேலும் மதுரை உள்ளே நுழைந்ததால் மற்றொரு நடப்பு சாம்பியன் சேப்பாக் 5வது இடத்தை மட்டுமே பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறியது. இதை தொடர்ந்து பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டியில் முதலிரண்டு இடங்கள் பிடித்த கோவை – திண்டுக்கல் அணிகளும் எலிமினேட்டர் போட்டியில் நெல்லை – மதுரை அணிகளும் மோதுவதற்கு தகுதி பெற்றன.

Advertisement