2023 உ.கோ குவாலிபயரில் மெகா ட்விஸ்ட் : ஜிம்பாப்வேயை வீட்டுக்கு அனுப்பிய ஸ்காட்லாந்து – ஃபைனலுக்கு செல்லப்போவது யார்?

Zim vs SCo
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. அதில் தொடரை நடத்தும் இந்தியா நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் டாப் 8 கிரிக்கெட் அணிகள் ஏற்கனவே சூப்பர் லீக் தொடரின் வாயிலாக நேரடியாக தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து கடைசி 2 அணிகளை தீர்மானிக்கும் குவாலிபயர் தொடர் கடந்த ஒரு மாதமாக ஜிம்பாப்வே நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அனைத்து அணிகளையும் லீக் சுற்றில் தோற்கடித்த ஜிம்பாவே சொந்த மண்ணில் முதல் அணியாக சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெற்றது.

மறுபுறம் தட்டுத்தடுமாறி சூப்பர் 6 சுற்றுக்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் எதிர்பார்த்தது போலவே நெதர்லாந்திடம் தோல்வியை சந்தித்து பரிதாபமாக வெளியேறியது. குறிப்பாக 1975, 1979 ஆகிய வருடங்களில் 2 சாம்பியன் பட்டங்களை வென்ற அந்த அணி வரலாற்றில் முதல் முறையாக 2023 உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது மொத்த ரசிகர்களையும் சோகத்தை ஆழ்த்தியது. அந்த நிலையில் 1996 உலகக் கோப்பையை வென்ற இலங்கை இத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்தலாக செயல்பட்டு சூப்பர் 6 சுற்றிலும் 4 போட்டிகளில் 4 வெற்றிகளைப் பெற்று முதல் அணியாக ஃபைனலுக்கு முன்னேறி இந்தியாவின் நடைபெறும் உலக கோப்பைக்கு 9வது அணியாக தகுதி பெற்றது.

- Advertisement -

மெகா ட்விஸ்ட்:
அதை தொடர்ந்து ஜிம்பாப்வே 10வது அணியாக தகுதி பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் இருந்தது. ஏனெனில் லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்த அந்த அணி சூப்பர் 6 சுற்றையும் வெற்றியுடன் துவங்கியது. ஆனால் இலங்கைக்கு எதிரான 2வது போட்டியில் தோல்வியை சந்தித்த ஜிம்பாப்வே ஜூலை 4ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்டது.

அந்த முக்கியமான போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தையும் பெற்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ஸ்காட்லாந்து 50 ஓவர்களில் போராடி 234/8 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மைக்கேல் லீஸ்க் 48 (34) மேத்தியூ க்ராஸ் 38 (75) ப்ரண்டன் மெக்முலன் 34 (34) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுக்க ஜிம்பாப்வே சார்பில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 235 ரன்கள் துரத்திய ஜிம்பாப்வே அணிக்கு கும்பி 0, கேப்டன் கிரைக் எர்வின் 2, கையா 12, சீன் வில்லியம்ஸ் 12 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 37/4 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணியை 5வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற போராடிய நம்பிக்கை நட்சத்திரம் சிக்கந்தர் ராசாவும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் மறுபுறம் ரியன் புர்ல் அரைசதம் அடித்து வெற்றிக்கு போராடிய நிலையில் எதிர்புறம் கை கொடுக்க முயன்ற மாதேவரே 40 ரன்கள் எடுத்து முக்கிய நேரத்தில் அவுட்டாகி சென்றார். இறுதியில் ரியன் புர்ல் 83 (84) ரன்களில் போராடி அவுட்டானதை பயன்படுத்திய ஸ்காட்லாந்து சிறப்பாக செயல்பட்டு 41.1 ஓவரிலேயே ஜிம்பாப்வேவை 23 ரன்களுக்கு சுருட்டி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் சோல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அப்படி இந்த தொடரில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் ஆரம்பம் முதலே அட்டகாசமாக செயல்பட்டு வந்த ஜிம்பாப்வே ஃபைனலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ட்விஸ்ட் போல இந்த தோல்வியால் சூப்பர் 6 சுற்றில் 5 போட்டிகளில் 2வது தோல்வியை பதிவு செய்த காரணத்தால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தகுதி பெறாமல் ஜிம்பாப்பேவும் வெளியேறியது.

இதையும் படிங்க:செக்யூரிட்டியை பைக்கில் கேட் வரை அழைத்து வந்து டிராப் செய்த தல தோனி – வைரலாகும் பழைய வீடியோ

மறுபுறம் ஜிம்பாப்வே அணியை வீட்டுக்கு அனுப்பிய ஸ்காட்லாந்து ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் வென்றால் அல்லது மோசமாக தோற்காமல் இருந்தாலே ஜூலை 9ஆம் தேதி இலங்கைக்கு எதிராக நடைபெறும் ஃபைனலுக்கு தகுதி பெறுவதுடன் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கும் 10வது அணியாக தகுதி பெற 90% வாய்ப்புள்ளது. ஒருவேளை அதில் நெதர்லாந்து அபாரமாக வெல்லும் பட்சத்தில் அந்த வாய்ப்பை தனதாக்கி விடும்.

Advertisement