செக்யூரிட்டியை பைக்கில் கேட் வரை அழைத்து வந்து டிராப் செய்த தல தோனி – வைரலாகும் பழைய வீடியோ

MS-Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இந்திய அணி கடந்த 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011-ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013-ஆம் ஆண்டு சாம்பியன் டிராபி என மூன்று வகையான ஐசிசி தொடர்களையும் கைப்பற்றிய அசத்தியது. இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டனாக பார்க்கப்படும் தோனி கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தனது ஓய்வினை அறிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் விளையாடிவுள்ள அவர் 90 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அது தவிர்த்து 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் அவர் இதுவரை 250 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார்.

- Advertisement -

அதோடு ஐந்து முறை சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய போதும் கேப்டனாக அணியை வழிநடத்தி வந்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலும் சரி, ஐபிஎல் கிரிக்கெட்டிலும் சரி அசைக்க முடியாத கேப்டனாக வலம் வரும் மகேந்திர சிங் தோனிக்கு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.

அதோடு சமூக வலைதளத்தில் பெரிய நாட்டம் இல்லாத அவர் அவ்வப்போது செய்யும் ஏதாவது செயல்கள் இணையத்தில் ட்ரெண்ட் அடிக்க தவறியதில்லை. அந்த வகையில் தற்போது தோனியின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவு வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் ராஞ்சியிலுள்ள தனது பண்ணை வீட்டில் செக்யூரிட்டி கார்டு ஒருவரை பைக்கில் அழைத்து வந்து கேட்டு வரை அவர் விட்டுச் சென்றது ரசிகர்கள் மத்தியில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : நேர்மைய பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? ஜானி பேர்ஸ்டோ – இங்கிலாந்தின் 4 சீட்டிங் வீடியோக்கள பாருங்க

தனது பண்ணை வீட்டிலிருந்து கேட் வருவதற்கு மிகவும் தூரம் என்பதனால் அவரை தோனி தனது பைக்கில் அழைத்து வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு அந்த பைக் தோனி முதன் முதலில் தனது ரயில்வே வேலை மூலம் கிடைத்த பணத்திலிருந்து வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டு ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement