நேர்மைய பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? ஜானி பேர்ஸ்டோ – இங்கிலாந்தின் 4 சீட்டிங் வீடியோக்கள பாருங்க

Johnny Bairstow Run Out
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. அதை விட லண்டனில் நடைபெற்ற 2வது போட்டியில் கேமரூன் கிரீன் வீசிய 56வது ஓவரில் பவுன்ஸ் ஆகி வந்த கடைசி பந்தை குனிந்து அடிக்காமல் விட்ட ஜானி பேர்ஸ்டோ விக்கெட் கீப்பர் பிடித்து முடிப்பதற்கு முன்பாகவே எதைப் பற்றியும் யோசிக்காமல் வெள்ளை கோட்டை விட்டு வெளியேறினார்.

அதை பயன்படுத்தி அலெக்ஸ் கேரி விழிப்புடன் செயல்பட்டு ரன் அவுட் செய்தது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. குறிப்பாக அந்தப் பந்தை எதிர்கொண்டு முடித்து விட்டேன் என்பதை காண்பிப்பதற்காக வெள்ளை கோட்டுக்குள் காலால் ஜானி பேர்ஸ்டோ குறியிட்டதை கருத்தில் கொண்டு நியாயத்துடன் செயல்பட வேண்டிய ஆஸ்திரேலியா நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

தகுதியற்ற இங்கிலாந்து:
இந்நிலையில் அதே போட்டியில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் சாதாரணமாக எதிர்கொண்டு தவறவிட்ட ஒரு பந்தை விக்கெட் கீப்பராகப் பிடித்த ஜானி பேர்ஸ்டோ அவர் கோட்டுக்குள் உள்ளே இருந்தும் வேண்டுமென்றே தூக்கி போட்டு அவுட் செய்ய முயற்சித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் அந்த சமயத்தில் பேர்ஸ்டோ ஸ்டம்ப்டை தவறவிட்ட நிலையில் லபுஸ்ஷேன் உள்ளே நின்றதால் எந்த சச்சரவும் ஏற்படவில்லை. ஒருவேளை அந்த தருணத்தில் அவுட்டாகியிருந்தால் இதே இங்கிலாந்தினர் நேர்மையைப் பற்றி பேசுவதற்கு பதிலாக விதிமுறையை பேசிக் கொண்டிருப்பார்கள் என ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் விமர்சிக்கின்றனர்.

அதை விட கடந்த சில வருடங்களுக்கு உள்ளூர் கவுண்டி தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட பேர்ஸ்டோ ஒரு போட்டியில் பேட்ஸ்மேன் தவற விட்ட பந்தை கையில் பிடித்து அவர் காலை தூக்கும் வரை காத்திருந்து அவுட் செய்த வீடியோவும் வைரலாகி வருகிறது. குறிப்பாக அந்த சமயத்தில் கீப்பர் பந்தை பிடித்து விட்டதால் “சரி எதுவும் நடக்கவில்லை” என்று நினைத்து பேட்ஸ்மேன் காலை தூக்கினார். அதை கழுகு போல காத்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பேர்ஸ்டோ பெய்ல்ஸை நீக்கியதால் வழக்கம் போல நடுவர் அவுட் கொடுத்தார். ஆனால் அதை மட்டும் புத்திசாலித்தனம் என்று இதே இங்கிலாந்தினர் பாராட்டியதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

இது போக எனது கேரியரில் நான் பார்த்ததிலேயே இது மோசமான நியாயத்துக்கு புறம்பான செயல் என இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் பிராட் இந்த விவகாரத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அப்படிப்பட்ட நியாயவாதியான அவர் கடந்த 2013 ஆஷஸ் தொடரில் அஸ்டன் அகர் வீசிய பந்தில் மொத்த மைதானத்திற்கும் கேட்கும் அளவுக்கு எட்ஜ் வாங்கி ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக எதுவுமே நடக்காதது போல் ஆஸ்கர் விருதை வெல்லும் நடிப்பை வெளிப்படுத்திய அவர் நேர்மைக்கு புறம்பாக தொடர்ந்து விளையாடினார்.

அப்படிப்பட்ட நீங்கள் நேர்மையைப் பற்றி பேசலாமா என்று மற்றொரு தரப்பு ஆஸ்திரேலிய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை விமர்சிக்கின்றனர். மேலும் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீரர் கிராண்ட் எலியட் அந்த பந்தை வீசிய ரியன் சைட்பாட்டம் மீது ரன் ஓடும் போது மோதியதால் வெள்ளைக்கோட்டை தொட முடியவில்லை. அப்போது இயன் பெல் கொடுத்த பந்தை பிடித்து கெவின் பீட்டர்சன் கொஞ்சமும் நியாயமின்றி அவரை ரன் அவுட்டாக்கினார்.

இதையும் படிங்க:வீடியோ : எங்கய்யா போய் கேட்ச் பிடிக்குற? ரசிகர்களை சிரிக்க வைத்த திண்டுக்கல் ஃபீல்டர் – டிஎன்பிஎல் தொடரில் ஸ்வாரஸ்யம்

இருப்பினும் அது நேர்மைக்கு புறம்பாக இருந்ததாக கருதிய நடுவரே தாமாக சென்று இங்கிலாந்து கேப்டன் பால் காலிங்வுட்டிடம் அந்த முடிவை வாபஸ் பெறுகிறீர்களா? என்று கேட்டார். ஆனால் நியாயத்தை தூக்கி குப்பையில் போடுங்கள் எங்களுக்கு அவுட் தான் வேண்டும் என்று அவர் தெரிவித்ததால் கிராண்ட் எலியாட் பெவிலியன் சென்றதை இப்போது மறக்காத ரசிகர்கள் கிரிக்கெட்டை கண்டுபிடித்தாலும் நியாயம் மற்றும் நேர்மையைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு எந்த தகுதியுமில்லை என்று இங்கிலாந்தினரை விமர்சித்து வருகின்றனர்.

Advertisement