எங்கய்யா போய் கேட்ச் பிடிக்குற? ரசிகர்களை சிரிக்க வைத்த திண்டுக்கல் ஃபீல்டர் – டிஎன்பிஎல் தொடரில் ஸ்வாரஸ்யம்

TNPL Catch
- Advertisement -

தமிழகத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் இதுவரை நடைபெற்று முடிந்த 26 போட்டிகளின் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை, திண்டுக்கல் நெல்லை ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்து அதிகாரப்பூர்வமாக பிளே ஆஃப் சுற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளன. மீதமிருக்கும் ஒரு இடத்திற்கு மற்றொரு நடப்பு சாம்பியன் சேப்பாக் மற்றும் மதுரை ஆகிய அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அந்த தொடரில் ஜூலை 3ஆம் தேதி நடைபெற்ற 26வது லீக் போட்டியில் சேலத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

திருநெல்வேலியில் இருக்கும் இந்தியா சிமெண்ட் கம்பெனி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேலம் 20 ஓவர்களில் தடுமாற்றமாகவே செயல்பட்டு 160/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சன்னி சந்து 57 (39) ரன்களும் எஸ் அரவிந்த் 26 (25) ரன்களும் எடுக்க திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக சுபோர்ட் பாத்தி மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 161 ரன்களை துரத்திய திண்டுக்கல் அணிக்கு சிவம் சிங் 8 (8) ஆதித்யா கணேஷ் 19 (13) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினர்.

- Advertisement -

அட்டகாசமான கேட்ச்:
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் விமல் குமார் 42 (36) ரன்களும் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் பாபா இந்திரஜித் அதிரடியாக 9 பவுண்டரி 3 சிக்ஸ்ருடன் 83* (50) ரன்களும் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து 18.2 ஓவரிலேயே வெற்றி பெற வைத்ததனர். அதனால் சேலம் சார்பில் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்த சன்னி சந்து போராட்டம் கை கொடுக்கவில்லை. முன்னதாக அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேலம் அணிக்கு சரவணன் வீசிய 5வது ஓவரில் 4, 4, 0, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட கவின் 5வது பந்திலும் சிக்ஸரை பறக்க விட்டார்.

குறிப்பாக நல்ல பவுன்ஸ் ஆகி வந்த அந்த பந்தை அப்படியே ஃபுல் ஷாட் வாயிலாக லெக் திசையில் கவின் சிறப்பான டைமிங் கொடுத்து அடித்தார். அதனால் பவுண்டரியை நோக்கி பறந்த அந்த பந்தை அப்பகுதியில் நின்று கொண்டிருந்த திண்டுக்கல் ஃபீல்டர் அவுசிக் ஸ்ரீனிவாஸ் கேட்ச் பிடிப்பதற்கு தயாரானார். ஆனால் தைரியமாக களத்திற்குள் இருந்து தாவி பிடிக்க வேண்டிய அவர் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சில அடிகள் நகர்ந்து நன்றாகவே பவுண்டரி எல்லைக்குள் சென்று பந்திற்கு வலிக்காமல் கூலாக கேட்ச் பிடித்தார்.

- Advertisement -

அதை பார்த்த பவுலர் சூப்பர்மேன் போல் தாவி கேட்ச் பிடிப்பாய் என்று பார்த்தால் இப்படி தாமாக சென்று எதிரணிக்கு 6 ரன்களை கொடுத்து விட்டாயே என்ற வகையில் ஸ்ரீனிவாசை நோக்கி கடுப்பான ரியாக்சன் கொடுத்தார். ஆனால் கேட்ச்சை சிக்ஸராக மாற்றிய ஸ்ரீநிவாஸ் என் கையில் என்னப்பா இருக்கு என்ற வகையில் கைகளை விரித்து பரிதாப ரியாக்சன் கொடுத்தது பார்க்கும் ரசிகர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. சொல்லப்போனால் அந்த சமயத்தில் களத்திற்குள் நின்று கேட்ச் பிடிக்காவிட்டாலும் முடிந்தளவுக்கு தாவி பந்தை தடுத்திருந்தால் கூட அவரால் குறைந்தபட்சம் சிக்ஸர் அல்லது பவுண்டரி போவதை நிறுத்தியிருக்க முடியும்.

இதையும் படிங்க:பி.சி.சி.ஐ அவர் மீது ஒரு கண் வைத்து உலககோப்பை தொடருக்கான அணியில் ஆதரவு தரவேண்டும் – கங்குலி கோரிக்கை

இருப்பினும் அந்த சமயத்தில் விழிப்புணர்வு இல்லாமல் ஏதோ ஒரு நினைப்பில் செயல்பட்ட அவர் எதிரணிக்கு சிக்ஸர் வழங்கினார் என்றே சொல்லலாம். அதனால் ரசிகர்களைப் போலவே “என்னப்பா களத்திற்குள் இருந்து பிடிப்பதற்கு பதிலாக வெளியே சென்று பிடிக்கிறாய்” என்று வர்னணையாளர் சுப்பிரமணியம் பத்ரிநாத் அதிருப்தியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement