பி.சி.சி.ஐ அவர் மீது ஒரு கண் வைத்து உலககோப்பை தொடருக்கான அணியில் ஆதரவு தரவேண்டும் – கங்குலி கோரிக்கை

Ganguly-2
- Advertisement -

இந்திய அணியானது கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை ஐசிசி கோப்பையை கைப்பற்ற முடியாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய அணி தங்களது அடுத்த தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு பயணித்துள்ளது. அங்கு நடைபெற உள்ள மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது. பின்னர் நாடு திரும்பும் இந்திய அணி ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்காக தயாராகும் ஆயத்த பணிகளில் ஈடுபட இருக்கிறது.

IND vs WI T20I

- Advertisement -

இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியை உறுதி செய்து தயார்படுத்தும் வகையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரிலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும், ஆசிய கோப்பையிலும் விளையாட இருக்கிறது. இந்த தொடர்களின் மூலம் உலகக்கோப்பை தொடரில் விளையாடப்போகும் வீரர்களை முடிவு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடருக்காக எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யலாம்? எப்படி எல்லாம் இந்திய அணி தேர்வு அமைய வேண்டும் என பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ-யின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Chahal

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் ரவி பிஷ்னாய், குல்தீப் யாதவ் போன்ற லெக் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்த உலகக் கோப்பை தொடரில் வாய்ப்பினை வழங்க பிசிசிஐ அவர் மீது ஒரு கண் வைக்க வேண்டும். ஏனெனில் இது போன்ற பெரிய தொடர்களில் நிச்சயம் லெக் ஸ்பின்னர்கள் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள்.

- Advertisement -

நமது அணியில் ரிஸ்ட் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹலை வைத்திருப்பது நமக்கு ஒரு கூடுதல் அட்வான்டேஜ்ஜை தரும். ஏனெனில் இந்தத் தொடரில் நாம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா போன்ற அணிகளை எதிர்த்து விளையாடும்போது நிச்சயம் அவர் பெரிய பங்களிப்பை வழங்குவார். 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பையில் பியூஸ் சாவ்லா நமது அணிக்காக அற்புதமான பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

இதையும் படிங்க : இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட புஜாரா எடுத்த அடுத்தகட்ட முடிவு – இப்போ எங்க? என்ன பண்றாரு தெரியுமா?

அதேபோன்று இம்முறை யுஸ்வேந்திர சாஹல் சிறப்பாக பந்து வீசுவார் என்று கருதுகிறேன். விரல்களை பயன்படுத்தி வீசும் ஸ்பின்னர்களை காட்டிலும் ரிஸ்ட்டை பயன்படுத்தி வீசும் லெக் ஸ்பின்னர்கள் கட்டாயம் அணிக்கு அவசியம் என்பதால் அவர் மீது ஒரு கண் வைக்குமாறு கங்குலி கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement