இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட புஜாரா எடுத்த அடுத்தகட்ட முடிவு – இப்போ எங்க? என்ன பண்றாரு தெரியுமா?

Pujara 1
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ ஆட்டக்காரரான சத்தீஷ்வர் புஜாரா கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 103 மூன்று போட்டிகளில் விளையாடி 7000-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். இந்திய அணிக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடி வரும் இவர் பல்வேறு வெற்றிகளில் தனது பங்களிப்பினை வழங்கியதுடன் வெளிநாட்டு மண்ணில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அசத்தி வந்தவர்.

Pujara 1

- Advertisement -

அவரது இந்த டெஸ்ட் கரியரில் 19 சதங்களையும், 35 அரை சதங்களையும் அடித்து அசத்தியுள்ளார். ஆனாலும் 35 வயதான இவர் சமீபகாலமாகவே தனது பேட்டிங்கில் பெரிய அளவு ரன்களை குவிக்காததால் அவர் மீது எழுந்த விமர்சனம் காரணமாக தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடிய பிறகு அவர் இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளார்.

மேலும் அவருடைய இடத்திற்கு இளம் வீரர்களை கொண்டு வர வேண்டும் என்று கருதிய இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகமான பி.சி.சி.ஐ தற்போது புஜாராவை வெளியேற்றி அந்த இடத்திற்கு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஷ்பால் ஆகியோரை தேர்வு செய்துள்ளது.

அந்த வகையில் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் துவங்க இருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து புஜாரா நீக்கப்பட்டுள்ளதால் தற்போது ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்தியா அணியுடன் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு பயணித்துள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட புஜாரா தற்போது மீண்டும் தனது திறமையை நிரூபிப்பதற்காக அடுத்த கட்ட முடிவினை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் ஜூலை 5-ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் நடைபெற இருக்கும் துலீப் டிராபி அரையிறுதி போட்டியில் வெஸ்ட் ஜோன் அணிக்காக விளையாட இருக்கிறார்.

இதையும் படிங்க : ஸ்பெலிங் தெரியாதா? அஸ்வின், கோலியை புறக்கணித்து 5 டெஸ்ட் மேட்ச் வின்னர்களை பெயரிட்ட ஹர்பஜன் – கலாய்க்கும் ரசிகர்கள்

இதன்மூலம் மீண்டும் தனது திறமையை உள்ளூர் போட்டிகளில் வெளிப்படுத்தி இந்திய அணியில் தான் விட்ட இடத்தினை பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. இவர் விளையாடும் அதே அணியில் சரிபராஸ் கான், பிரித்வி ஷா, சூரியகுமார் யாதவ் மற்றும் பிரியங்க் பன்சால் ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement