ஸ்பெலிங் தெரியாதா? அஸ்வின், கோலியை புறக்கணித்து 5 டெஸ்ட் மேட்ச் வின்னர்களை பெயரிட்ட ஹர்பஜன் – கலாய்க்கும் ரசிகர்கள்

Harbhajan
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் 3 – 4 மணிநேரங்களில் முடியும் டி20 போட்டிகள் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்படும் அபிமான கிரிக்கெட்டாக உருவெடுத்துள்ளது. அதன் காரணமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு குறைந்து வருவதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக நூற்றாண்டுக்கு முன்பாக முதல் முறையாக துவங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் 5 நாட்கள் நடைபெற்றாலும் ட்ராவில் முடிந்ததால் அலுப்பு தட்டும் வகையில் அமைந்தன. இருப்பினும் அழிவின் விளிம்பில் சென்ற அதற்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனும் பிரத்தியேக உலகக்கோப்பை ஐசிசி அறிமுகப்படுத்தியதால் தற்போது டெஸ்ட் போட்டிகள் டி20 கிரிக்கெட் போல த்ரில்லாக நடைபெறுகிறது.

குறிப்பாக சமீப காலங்களில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து வெறும் 1 ரன் மற்றும் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றதை எடுத்துக்காட்டாக சொல்லலாம். அதை விட ஒருநாள், டி20 போட்டிகளைக் காட்டிலும் பொறுமையையும் தரத்தையும் திறமையும் சோதிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளை வைத்தே ஒரு வீரரின் மதிப்பை ஜாம்பவான்கள் மதிப்பிடுவார்கள். ஏனெனில் டி20 போட்டிகளில் 50 பந்துகளில் 100 ரன்கள் எடுப்பதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்கள் எடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

- Advertisement -

ஹர்பஜன் டாப் 5:
அப்படிப்பட்ட தரமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்சமயத்தில் உலக அரங்கில் சிறந்து விளங்கும் 5 வீரர்களை பெயரிடுமாறு பிரபல இந்திய செய்தியாளர் அயாஸ் மேனன் ட்விட்டரில் கேட்டார். குறிப்பாக நுணுக்கங்களைத் தாண்டி அழுத்தமான பெரிய போட்டிகளில் தங்களது திறமையால் முடிவை தலைகீழாக மாற்றி வெற்றிகளை பெற்றுக் கொடுப்பவரை பெயிரிடுமாறு கேட்டுக்கொண்ட அவர் பென் ஸ்டோக்ஸ், பட் கமின்ஸ் ஆகியோரை தமது சார்பில் தேர்வு செய்தார்.

அதைப் பார்த்த முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனியை மிஞ்சி சவாலான வெளிநாட்டு மண்ணின் சதங்களை அடித்து காபா போன்ற வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிசப் பண்ட் ஆகிய இந்திய வீரர்களை பெயரிட்டுள்ளார். அதே போல சுழலுக்கு சாதகமற்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் அசத்தலாக செயல்பட்டு சுமார் 500 விக்கெட்களை எடுத்து 100 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிய வீரராக சமீபத்தில் சாதனை படைத்த நேதன் லையனையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

அது போக நவீன கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் 9000க்கு மேற்பட்ட ரன்களை அடித்து ஜாம்பவானாக அசத்தி வரும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக போற்றப்படும் இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரையும் அவர் மேட்ச் வின்னர்களாக தேர்வு செய்துள்ளார். இருப்பினும் இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக செயல்பட்டு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து மேட்ச் வின்னராக போற்றப்படும் விராட் கோலியை தேர்ந்தெடுக்கவில்லை.

மேலும் 400க்கும் மேற்பட்ட விக்கெட்களையும் 3000க்கும் மேற்பட்ட ரன்களையும் எடுத்து சச்சினை மிஞ்சி அதிக தொடர் நாயகன் விருதுகள் வென்ற வீரராக சாதனை படைத்துள்ள அஷ்வினையும் அவர் பெயரிடவில்லை. இருப்பினும் தமது கேரியரின் கடைசி காலத்தில் தன்னுடைய வாய்ப்புகளை பறித்த அஷ்வின் மீது சமீப காலங்களாகவே வன்மத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இப்பட்டியலில் தேர்வு செய்யாததில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அதை விட அவர் வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் நேதன் லயன் தவிர்த்து ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பெயர்களை ஆங்கில முறைப்படி ஹர்பஜன் சிங் இலக்கண பிழையுடன் தவறாக எழுதியுள்ளார்.

இதையும் படிங்க:ஜானி பேர்ஸ்டோவின் சர்ச்சையான ரன் அவுட் – மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்த தல தோனி – எதற்கு தெரியுமா (வீடியோ பாருங்க புரியும்)

குறிப்பாக ஜூலை 3ஆம் தேதியான நேற்று தம்முடைய 43வது பிறந்தநாளை கொண்டாடிய அவருக்கு நிறைய பேர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அந்த நிலையில் நேற்று இரவு கேக் சாப்பிட்டு மற்றும் மது அருந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் அந்த சமயத்தில் ட்விட்டரில் போற போக்கில் இப்படி தவறான ஸ்பெல்லிங்குடன் எழுதி விட்டு சென்றதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Advertisement