
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஒன்பதாவது முறையாக ஆசிய கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதிலும் குறிப்பாக இம்முறை இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 19.1 ஓவரில் 146 ரன்களை மட்டுமே எடுக்க பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணியை இந்த தொடரிலேயே மூன்றாவது முறையாக இந்திய அணி வீழ்த்தி அசத்தியது. இந்நிலையில் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் இந்திய அணி சார்பாக சிறப்பாக செயல்பட்ட ஷிவம் தூபேவை பாராட்டி பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் ஷிவம் துபே முதல் ஓவரை வீச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே அவர் பந்துவீச்சில் மிகச் சரியாக பயிற்சி எடுத்து வந்ததால் அவரால் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட முடிந்தது. ஏற்கனவே பயிற்சியின் போது நாங்கள் அவரின் திறன்களை முன்னேற்ற நிறையவே பேசியிருந்தோம்.
அந்த வகையில் இந்த தொடரில் அவர் பந்துவீச்சில் நல்ல முன்னேற்றம் கண்டார். அதேபோன்று ஹார்டிக் பாண்டியாவுக்கு கடந்த போட்டியின் போது காயம் ஏற்பட்டதன் காரணமாக புதிய பந்தில் துவக்க ஓவரை வீசும் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவரும் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை கையில் எடுத்து மிகச் சிறப்பாக பந்துவீசி அசத்தியிருந்தார்.
இதையும் படிங்க : இந்த ஆசிய கோப்பை தொடருக்கான என்னுடைய முழு சம்பளத்தையும் நான் அவங்களுக்கு தரேன் – கேப்டன் அறிவிப்பு
அதுமட்டும் இன்றி பேட்டிங்கிலும் சரியான நேரத்தில் தேவையான ரன்களை எடுத்து இந்திய அணிக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார் என மோர்னே மோர்கல் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. ஷிவம் துபே கடையாக விளையாடிய 34 டி20 போட்டிகளில் இந்திய அணி தோல்வியையே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.