- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தூங்காத இரவுகளை கொடுத்த விராட், ரோஹித் இதை செஞ்சா.. 2027 உ.கோ விளையாடுவாங்க.. மோர்கெல் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 0 – 2 (2) என்ற கணக்கில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்தித்தது. ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராகவும் சொந்த மண்ணில் இந்தியா ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்திருந்தது. அந்த வேதனை தீர்வதற்குள் மற்றொரு தோல்வியால் இந்திய ரசிகர்கள் பெரிய ஏமாற்றத்தை சந்தித்தனர்.

இதைத் தொடர்ந்து தெனாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 30ஆம் தேதி ராஞ்சியில் துவங்குகிறது. அத்தொடரில் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட், டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்ட அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப் போகிறார்கள்.

- Advertisement -

தூக்கமற்ற இரவுகள்:

2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் ஓய்வு பெற நினைக்கும் அவர்களை தேர்வுக்குழு கழற்றி விட நினைக்கிறது. அதற்கு இடம் கொடுக்க விரும்பாத அவர்கள் ஃபிட்டாக பெரிய ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றி பெற வைத்து 2027இல் விளையாடத் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் விராட், ரோஹித் தொடர்ந்து ஃபிட்டாக தங்களை வைத்துக்கொள்ளும் பட்சத்தில் 2027இல் விளையாடுவதில் தடையில்லை என்று பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடும் போது அவர்கள் தமக்கு தூங்காதே இரவுகளைக் கொடுத்ததாகவும் மோர்கெல் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தரமான வீரர்களான அவர்கள் தொடர்ந்து கடினமான உழைக்கவும் ஃபிட்டாக இருக்கவும் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர். நான் எப்போதும் அனுபவத்தை நம்புகின்றவன். நீங்கள் அதை எங்கேயும் கண்டறிய முடியாது”

- Advertisement -

மோர்கெல் பாராட்டு:

“முக்கிய கோப்பைகளை வென்றுள்ள அவர்களுக்கு எப்படி பெரிய தொடர்களில் விளையாட வேண்டும் என்பது தெரியும். உலகக் கோப்பைக்கு இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது. எனவே தங்களுடைய ஃபிட்னஸை நிர்வாகிக்கும் வரை தங்களுடைய உடல் நன்றாக ஒத்துழைக்கிறது என்ற கருதும் வரை உலகக் கோப்பை பயணத்தில் அவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு எதிராகவும் நான் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளேன்”

இதையும் படிங்க: 8 ஃபோர்ஸ் 8 சிக்ஸ் 53 பந்தில் 110 ரன்ஸ்.. ஜோடியாக கலக்கிய ஆயுஷ் மாத்ரே – துபே.. சிஎஸ்கே ஃபேன்ஸ் ஹேப்பி

“அவர்களுக்கு எதிராக பந்து வீசும் போது நான் நிறைய தூக்கமற்ற இரவுகளையும் கொண்டிருந்தேன். எனவே ஒரு பவுலராக அவர்களுக்கு எதிராக விளையாட எப்படி தயாராக வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். டெஸ்ட் தொடரில் எங்களுக்கு கடந்த 2 வாரங்கள் கடினமாக இருந்தது. இருப்பினும் உங்களது எனர்ஜியை வெள்ளைப்பந்து அணியின் மேலே கொண்டு வர வேண்டும். விராட், ரோஹித் ஆகியோர் வந்துள்ளதால் நாங்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விளையாட உற்சாகத்துடன் உள்ளோம்” என்று கூறினார்

- Advertisement -