இந்தியாவில் சயீத் முஸ்டாக் அலி கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் நவம்பர் 28ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற எலைட் குரூப் ஏ பிரிவின் போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் சர்துள் தாக்கூர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய விதர்பா 20 ஓவரில் 192/9 ரன்களை குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதர்வா டைட் மற்றும் அமன் மோக்கடே 9.2 ஓவரில் 115 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கத்தைக் கொடுத்தனர். அந்த ஜோடியில் அமன் அரை சதத்தை அடித்து 61 (30) ரன்களும், அதர்வா தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்து 64 (36) ரன்களும் குவித்து அசத்தினார்.
கலக்கிய ஆயுஷ் – துபே:
ஆனால் மற்ற வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக சிவம் துபே 3, சைராஜ் பட்டேல் 3, அன்கோலேகர் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அடுத்து விளையாடிய மும்பை அணிக்கு இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே விதர்பா பவுலர்களை வெளுத்து வாங்கினார். எதிர்புறம் அஜிங்கிய ரகானே 0, ஹர்திக் தாமோர் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
இருப்பினும் அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் நிதானமாக விளையாடி 35 (30) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஆயுஷ் அரை சதத்தை அடித்து மும்பையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். அடுத்ததாக வந்த சிவம் துபேவுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய அவர் நேரம் செல்ல இருமடங்கு அதிரடியை வெளிப்படுத்தி சதத்தை அடித்தி அசத்தினார்.
சிஎஸ்கே ஜோடி அசத்தல்:
அவருடன் இணைந்த துபே தம்முடைய ஸ்டைலில் 3 பவுண்டரி 3 சிக்ஸர்களை 39* (19) ரன்களை 205.26 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி ஃபினிஷிங் செய்தார். இறுதியில் ஆயுஷ் 8 பவுண்டரி 8 சிக்ஸருடன் 110* (53) ரன்களை 207.54 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து நாட் அவுட்டாக நின்றார். அவர்களது அசத்தலான ஆட்டத்தால் 17.5 ஓவரிலேயே 194/3 ரன்கள் எடுத்த மும்பை 7 விக்கெட்டுகளை எடுத்து எளிதாக வென்றது.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டின் வருங்காலத்தை இந்திய மண்ணில் காப்பாற்ற இதை செய்தே ஆகனும் – ஹர்பஜன் சிங் கருத்து
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சிவம் துபே 2023 கோப்பையை சிஎஸ்கே வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் இந்திய அணியில் கம்பேக் கொடுத்த அவர் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 ஆசியக் கோப்பையை வெல்வதற்கு பங்காற்றினார். அதே போல கடந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான ஆயுஷ் சதமடித்து தம்மை நம்பிக்கை நட்சத்திரமாக அடையாளப்படுத்தினார். தற்போது அவர்கள் இப்போட்டியில் ஜோடியாக கலக்கியது மும்பையை காட்டிலும் சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைப்பதாக இருக்கிறது.



