- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவங்க இருப்பதே இந்தியாவின் அதிர்ஷ்டம்.. என்னோட டார்கெட் இது தான்.. புதிய கோச் மோர்கல் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மோர்னே மோர்கெல் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் டேல் ஸ்டைன் பவுலிங் பார்ட்னராக செயல்பட்டு தென்னாபிரிக்காவின் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர் கௌதம் கம்பீர் தலைமையில் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ளார். அந்த வகையில் நல்ல தரத்தையும் திறமையும் அனுபவமும் கொண்டுள்ளதால் அவரை பவுலிங் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்ந்தெடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்கும் வங்கதேச டெஸ்ட் தொடரிலிருந்து மோர்னே மோர்கல் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். அதற்கு முன்பாக தற்போது சென்னையில் இந்திய அணியுடன் முதல் முறையாக இணைந்துள்ள அவர் தம்முடைய வேலைகளையும் பயிற்சிகளையும் தொடங்கியுள்ளார்.

- Advertisement -

புதிய பயிற்சியாளர்:

இந்நிலையில் ஏற்கனவே இந்திய அணியில் விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற தரமான வீரர்கள் நிறைந்திருப்பது அதிர்ஷ்டம் என்று மோர்கெல் கூறியுள்ளார். எனவே அவர்களின் பலம் பலவீனங்களை புரிந்து கொண்டு தேவையான உதவிகளை செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிகராக இந்திய அணியை வழிநடத்துவதே தம்முடைய இலக்கு என்றும் மோர்கெல் தெரிவித்துள்ளார். இது பற்றி பிசிசிஐ இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற சீனியர் வீரர்களை கொண்டிருப்பதற்கு நாம் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அவர்கள் நமது அணியை முன்னின்று வழி நடத்துவார்கள். அவர்களுக்கு ஆதரவளிப்பது என்னுடைய பொறுப்பாகும். இந்த நீல ஜெர்சி நிறைய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது. இந்திய வீரர்களை இந்த சூழ்நிலையில் செட்டிலாக வைத்து எனது அனுபவத்தை அவர்களுக்கு கொடுப்பதே என்னுடைய வேலையாகும்”

- Advertisement -

அசத்துவாரா மோர்கெல்:

“என்னைப் பொறுத்த வரை வீரர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். சில இந்திய வீரர்களுக்கு எதிராக நான் விளையாடியுள்ளேன். சிலர் ஐபிஎல் தொடரில் விளையாடி பார்த்துள்ளேன். எனவே அவர்களுடைய பலம் பலவீனங்களை புரிந்து அதற்கு தகுந்தார் போல் அடுத்த தொடர்களுக்கு தேவையான இலக்கை செட்டிங் செய்வது முக்கியம்”

இதையும் படிங்க: சேப்பாக்கம் பிட்சில் வைக்கப்பட்டுள்ள டிவிஸ்ட்.. வங்கதேச அணியை இப்போவே வீழ்த்தியாச்சி – விவரம் இதோ

“இந்திய வீரர்கள் எப்படி தங்கள் விஷயங்களை செய்தார்கள் மற்றும் அவர்கள் எவ்வளவு தொழில்முறையாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். இது வெற்றி நடைக்கான நல்ல அறிகுறி. அதை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். மொத்தத்தில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படும் மோர்கெல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை இந்தியா வெல்ல உதவ வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

- Advertisement -