IND vs AUS : மெல்போர்ன் மைதான சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அகமதாபாத் டெஸ்ட் – நாளைக்கு வேர்ல்டு ரெக்கார்ட் கன்பார்ம்

Motera
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நாளை குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2 வெற்றியும், ஆஸ்திரேலியா அணி ஒரு வெற்றியும் பெற்று தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இருக்கின்றனர். அதனை தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள இந்த நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பினை உறுதி செய்யும் என்பதனால் நாளைய கடைசி போட்டியானது இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

IND vs AUS

- Advertisement -

அதேவேளையில் முதல் இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணியும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றதால் நாளைய நான்காவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்ய காத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த கடைசி போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளைய போட்டி நடைபெற இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒரு வரலாற்று சாதனை நடைபெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி நாளைய போட்டி நடைபெறும் இந்த நரேந்திர மோடி மைதானத்தில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் இருக்கைகள் இருக்கும் வேளையில் அதற்கான டிக்கெட்டின் விலைகள் 200, 300, 350, 1000, 2000 என பல்வேறு வகையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

motera

இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனியும் நேரில் வர இருப்பதினால் நாளைய இந்த முதல்நாள் ஆட்டத்தை காண ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2013 மற்றும் 14 ஆம் ஆண்டில் மெல்போர்னில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான ஆசெஷ் போட்டியில் ஒருநாளில் 91 ஆயிரத்து 112 ரசிகர்கள் நேரில் கண்டு களித்தனர்.

- Advertisement -

இதுவே ஒரு டெஸ்ட் போட்டியை நேரில் அதிகபட்ச ரசிகர்கள் கண்டுகளித்த போட்டியாக சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் அந்த சாதனையை நாளை துவங்கவுள்ள இந்த நான்காவது டெஸ்ட் போட்டி முறியடிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இருநாட்டு பிரதமர்களும் ஒன்றாக போட்டியை நேரில் காண வரும் வேளையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் நேரில் காண்பார்கள் என்பதனால் கட்டாயம் நாளைய போட்டி வரலாற்று சாதனையை படைக்க இருப்பது உறுதி.

இதையும் படிங்க : வீடியோ : அடுத்த டார்கெட் விராட் கோலி தான், சொன்னது போலவே பாபர் அசாமை அவுட்டாக்கி சவாலில் ஜெயித்த பாக் பவுலர்

மேலும் இருநாட்டு பிரதமர்களும் மைதானத்திற்கு நேரில் வருகை புரிவதால் வழக்கமான பாதுகாப்பை விட கூடுதலாக 2000 போலீசார் இந்த போட்டிக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என குஜராத் போலீசாரும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இரு அணிகளும் தற்போது நரேந்திர மோடி மைதானத்திற்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் நாளைய போட்டி அனைவரது மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement