வீடியோ : அடுத்த டார்கெட் விராட் கோலி தான், சொன்னது போலவே பாபர் அசாமை அவுட்டாக்கி சவாலில் ஜெயித்த பாக் பவுலர்

Haris Rauf Virat Kohli
- Advertisement -

2023 பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 7ஆம் தேதியன்று நடைபெற்ற 23வது லீக் போட்டியில் பெஷாவர் மற்றும் லாகூர் அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த பெசாவர் அணி விக்கெட்டுகளை இழந்தாலும் அதிரடியாக விளையாடுவதை கைவிடாமல் செயல்பட்டதால் 19.3 ஓவரில் 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாய்ம் ஆயுப் 68 (36) ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 50 (41) ரன்களும் எடுக்க லாகூர் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 208 ரன்களை துரத்திய லாகூர் அணிக்கு பகார் ஜமான் 11, சாம் பில்லிங்ஸ் 0 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் மிடில் ஆர்டரில் ஹுசைன் தாலத் 63 (37) கேப்டன் ஷாஹின் அஃப்ரிடி 52 (36) ரன்கள் எடுத்தும் இலக்கை எட்ட முடியவில்லை. அதனால் 19.2 ஓவரில் 172 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டிய பெசாவர் 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முன்னதாக பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திர முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஹரிஷ் ரவூப் இந்தத் தொடர் துவங்குவதற்கு முன்பாக பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் பாபர் அசாமை அவுட் செய்யப்போவதாக அவரிடமே சவால் விடுத்திருந்தார்.

- Advertisement -

அடுத்த டார்கெட்:
குறிப்பாக இந்த தொடர் முடிவதற்குள் உங்களை நிச்சயமாக அவுட் செய்து காட்டுகிறேன் என்று விளையாட்டாக சவால் விடுத்த அவர் இந்தியாவின் நம்பிக்கை நாயகன் விராட் கோலியையும் அடுத்த முறை மோதும் போது அவுட் செய்வதே தம்முடைய லட்சியம் என்று பாபர் அசாமிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்து பேசியது பின்வருமாறு. “என்ன ஆனாலும் சரி உங்களுடைய விக்கெட் எனக்கு தேவை. நான் விக்கெட்டுகளை எடுக்க விரும்பும் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் நீங்களும் விராட் கோலி மட்டும் தான் எஞ்சியுள்ளீர்கள். வில்லியம்சன் சிலமுறை ஸ்லிப் பகுதிகளில் தப்பி விட்டார். இருப்பினும் நான் இது போன்ற 3 – 4 தரமான வீரர்களை மனதில் வைத்துள்ளேன்” என்று கூறினார்.

அதற்கு பாபர் அசாம் “பயிற்சி எடுக்கும் போதே நீங்கள் என்னுடைய விக்கெட்டை எடுத்து விட்டீர்களே. அது போதாதா? அதை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாதா” என்று பதிலளித்தார். ஆனால் அதற்கு ஹரிஷ் ரவூப் “இல்லை. நேரடி போட்டியில் உங்களுடைய விக்கெட்டை நான் எடுக்க விரும்புகிறேன்” என்று பாபர் அசாமிடம் மீண்டும் தனது சவாலை உறுதியாக தெரிவித்தார்.

- Advertisement -

அந்த நிலையில் இந்த போட்டியில் 51 ரன்கள் எடுத்திருந்த பாபர் அசாம் ஹரிஷ் ரவூப் வீசிய 15வது ஓவரின் 2வது பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து அவுட்டானார். அந்த வகையில் ஏற்கனவே விடுத்த சவாலில் ஹரிஷ் ரவூப் தனது தேசிய அணியின் கேப்டன் பாபர் அசாமை அவுட் செய்து வென்றதாக பிஎஸ்எல் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டு பாராட்டியுள்ளது.

அப்படி தன்னுடைய சவாலில் பாபர் அசாமை அவுட்டாக்கி பாதி வென்றுள்ள ஹரிஸ் ரவூப் அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் போது விராட் கோலியை அவுட்டாக்கி மீதி சவாலை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பாகிஸ்தான் ரசிகர்களிடம் இப்போதே ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இருப்பினும் கடந்த 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 31/4 என சரிந்த இந்தியாவை வரலாற்றின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடி காப்பாற்றிய விராட் கோலி இதே ஹரிஷ் ரவூஃப் வீசிய 19ஆவது ஓவரில் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு வெற்றி பெற வைத்தார். குறிப்பாக அவரது பந்தில் பேக் ஃபுட்டில் நேராக விராட் கோலி அடித்த சிக்சர் டி20 உலக கோப்பையின் மிகச்சிறந்த சிங்கிள் ஷாட் என்று ஐசிசி அறிவித்தது.

இதையும் படிங்க:IND vs AUS : 4 ஆவது டெஸ்ட் போட்டியை நேரில் காண வரும் பிரதமர் நரேந்திர மோடி – ஏன் தெரியுமா?

அத்துடன் அதை எவ்வாறு அடித்தார் என்பதை இப்போதும் புரிந்து கொள்ள முடியவில்லை என்று பல ஜாம்பவான் முன்னாள் வீரர்கள் விராட் கோலியை வியந்து பாராட்டினார்கள். அதன் காரணமாகவே விராட் கோலியின் விக்கெட்டை எடுக்கும் வெறியில் ஹரிஷ் ரவூப் சுற்றி வருகிறார் என்றும் சொல்லலாம். இருப்பினும் அதற்கு விராட் கோலி தக்க பதிலடி கொடுப்பார் என்பதே இந்திய ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

Advertisement