- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர்தான்.. 23 வயது வீரரை கைகாட்டிய – மான்டி பனேசர்

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இதற்காக தற்போது இங்கிலாந்து சென்றடைந்துள்ள இந்திய அணி தீவிர பயிற்சியினையும் மேற்கொண்டு வருகிறது. இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்று விட்டதால் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடரில் விளையாட இருக்கிறது.

இந்திய அணியின் அடுத்த விராட் கோலி இவர்தான் : மான்டி பனேசர்

ஏற்கனவே வெவ்வேறு காலகட்டங்களில் இந்திய அணிக்காக பல்வேறு பேட்டிங் சூப்பர் ஸ்டார்கள் விளையாடியிருந்த வேளையில் தற்போது ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றதற்கு பின்னர் அடுத்த பேட்டிங் சூப்பர் ஸ்டார் யார்? என்று தேடல் அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக சுப்மன் கில் பார்க்கப்பட்டு வருகிறார் . இருந்தாலும் ஒருநாள் போட்டிகளை தவிர்த்து மற்ற இரண்டு ஃபார்மேட்களிலும் அவரது பேட்டிங் ஃபார்ம் பெரியளவில் பிரகாசிக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் விளையாட இருக்கும் தமிழக வீரரான சாய் சுதர்சனை அடுத்த விராட் கோலி என முன்னாள் இங்கிலாந்து வீரரான மான்டி பனேசர் பாராட்டியுள்ளார். 23 வயதான சாய் சுதர்சன் ஏற்கனவே சர்வே அணிக்காக கவுண்டி போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதன் காரணமாக அவர் எதிர்வரும் இங்கிலாந்து தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என மான்டி பனேசர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சாய் சுதர்சன் சர்வதேச போட்டியில் விளையாடும் அளவிற்கு நிச்சயம் திறமையான வீரர் தான். ஏற்கனவே இங்கிலாந்து மண்ணில் கவுண்டி கிரிக்கெட்டில் தனது திறனை நிரூபித்த அவர் எதிர்வரும் இந்த டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

இந்தியாவில் ஏகப்பட்ட இளம் வீரர்கள் திறமையுடன் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஒருவரை குறிப்பிட்டு நான் சொல்ல வேண்டுமெனில் சாய் சுதர்சனை சொல்லுவேன். ஏனெனில் சர்ரே அணிக்காக அவர் பயமற்ற, முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இங்கிலாந்து சூழலில் மற்ற பேட்ஸ்மேன்கள் கஷ்டப்படும் போது சாய் சுதர்சன் மிக எளிதாக விளையாடியிருந்தார்.

இதையும் படிங்க : 27 கோடிக்கு அவர் ஒர்த் இல்ல.. முதல்ல இதை செய்யுங்க.. ரிஷப் பண்ட் விடயத்தில் ஆலோசனை கொடுத்த – ஆகாஷ் சோப்ரா

எனவே தான் கூறுகிறேன் இந்திய அணியின் அடுத்த விராட் கோலி சாய் சுதர்சன் தான் அவரால் நான்காவது இடத்தில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என மான்டி பனேசர் கூறியுள்ளார். அவர் கூறியது போலவே இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் 759 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -