27 கோடிக்கு அவர் ஒர்த் இல்ல.. முதல்ல இதை செய்யுங்க.. ரிஷப் பண்ட் விடயத்தில் ஆலோசனை கொடுத்த – ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra and Pant
- Advertisement -

கடந்த ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ரிஷப் பண்ட் தலைமையில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற லக்னோ அணியானது 14 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் 8 தோல்வி என புள்ளி பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்து வெளியேறியது.

ரிஷப் பண்டுக்கு இந்த தொகை ரொம்ப அதிகம் : ஆகாஷ் சோப்ரா

இப்படி லக்னோ அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேறியதற்கு பிறகு அந்த அணியின் கேப்டன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் இந்த தொடரில் அவர் கேப்டனாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது மட்டுமின்றி பேட்டிங்கிலும் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

இந்த ஆண்டு 14 ஆட்டங்களில் விளையாடிய அவர் 1 சதம் மற்றும் 1 அரைசதம் அடித்தாலும் வெறும் 24 ரன்கள் சராசரியுடன் 269 ரன்களை மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்தார். மிகப்பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதால் அவர்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படி தனது மட்டமான பேட்டிங் பார்மை அவர் வெளிப்படுத்தியது அந்த அணியின் தோல்விக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டை அடுத்த ஆண்டுக்கு முன்னர் அந்த அணி வெளியேற்றி பின்னர் மினி ஏலத்தில் அவரை இன்னும் குறைந்த தொகைக்கு வாங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ரிஷப் பண்டுக்கு 27 கோடி கொடுத்தது மிகப்பெரிய தொகை. எனவே என்னை பொருத்தவரை அவர் இந்த ஆண்டு லக்னோ அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் 14 முதல் 15 கோடிக்கு அவரை எடுத்தாலே போதும்.

- Advertisement -

மீதமுள்ள தொகையை வைத்து இன்னும் சில திறமையான வீரர்களை வாங்கலாம். ரிஷப் பண்ட் திறமையான வீரர்தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்படக்கூடியவர் அல்ல என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா – தெ.ஆ, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மாற்றம்.. புதிய அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அடுத்ததாக சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியுடன் பயணித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளுக்கான துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள அவர் எதிர்வரும் இந்த இங்கிலாந்து தொடரில் நிச்சயம் தனது பார்மை மீட்டெடுப்பார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement