- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியாவுக்கு 19 வயசு குழந்தை பயத்தை காமிச்சுட்டான்.. கோலிக்கு இந்த தண்டனை கொடுங்க.. மான்டி பனேசர்

ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் நாளில் 311-6 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக சாம் கோன்ஸ்டஸ் 60, உஸ்மான் கவாஜா 52, லபுஸ்ஷேன் 72 ரன்கள் எடுத்த அந்த அணிக்கு களத்தில் ஸ்டீவ் ஸ்மித் 68*, கமின்ஸ் 8* ரன்களுடன் உள்ளனர்.

முன்னதாக அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 19 வயது இளம் வீரர் ஷாம் கோன்ஸ்டஸ் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக 3 வருடங்கள் கழித்து சிக்ஸர் அடித்த வீரர் மற்றும் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற 2 சாதனைகளை அவர் படைத்தார். அந்த வகையில் அதிரடியாக விளையாடிய அவரை 10வது ஓவரின் முடிவில் விராட் கோலி தோளில் இடித்தார்.

- Advertisement -

இந்தியாவுக்கு பயம்:

அது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஐசிசி அவருக்கு 20% போட்டி சம்பளத்தை அபராதமாக விதித்தது. இந்நிலையில் விராட் கோலி மீண்டும் அவ்வாறு நடந்து கொண்டால் தடை விதிக்குமாறு முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் விமர்சித்துள்ளார். மேலும் சாம் கோன்ஸ்டஸ் ஈகோவுடன் விளையாடி இந்தியாவை பயமுறுத்தியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த இளம் வீரர் இந்தியாவை பயமுறுத்தி விட்டார். அவர் சில அதிரடியான ஷாட்டுகளை அடித்து இந்தியா மீது குத்து விட்டார். அதை அவர்கள் விரும்பவில்லை. குறிப்பாக பும்ராவுக்கு எதிராக அவர் சிக்ஸர் அடித்தது இந்தியாவின் ஈகோவுக்கு வழியை கொடுத்தது என்று நினைக்கிறேன். அதனாலேயே விராட் கோலி அவ்வாறு செய்தார்”

- Advertisement -

சஸ்பென்ட் பண்ணுங்க:

“ஆனால் 19 வயது குழந்தையிடம் அவர் அப்படி செய்தது தேவையில்லாதது. அதே சமயம் விராட் கோலி தன்னுடைய கிரிக்கெட்டை இப்படித்தான் ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர். மற்ற அணிகள் தன்னுடைய அணி மீது குத்து விட்டால் விராட் கோலி இப்படித்தான் ரியாக்சன் செய்வார். ஆனால் அதற்காக தற்போது விராட் கோலி வருந்துவார். கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நாம் 19 வயது பையனுடன் ஏன் அதைச் செய்தோம்? என்று அவர் நினைப்பார்”

இதையும் படிங்க: இது என்ன தெருவோர ஆட்டமா? பயத்தால் தடுமாறிய ஜெய்ஸ்வாலுக்கு ஃபீல்டிங் சொல்லிக் கொடுத்த ரோஹித்

“இப்படி நடந்து கொண்டதற்காக அவருக்கு தடை விதித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒருவேளை மீண்டும் அவர் அதை செய்தால் தடை செய்யுங்கள். ரொனால்டோ இவ்வாறு செய்வதை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் விராட் கோலி தேவையின்றி இளம் வீரரிடம் இவ்வாறு செய்கிறார்” எனக் கூறினார். இருப்பினும் ஆரம்பக்காலம் முதலே இந்திய அணிக்கு ஒன்று என்றால் விராட் கோலி இவ்வாறு நடந்து கொள்வது வாடிக்கையாகும்.

- Advertisement -