- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்த பலம் இல்லாத இந்தியா.. கில் தலைமையில் இங்கிலாந்தில் சரிந்து தோற்கும்.. மான்டி பனேசர் கணிப்பு

இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கும் அந்தத் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்குகிறது. பொதுவாக ஸ்விங், வேகம், பவுன்ஸ் ஆகியவற்றுக்கு சாதகமாக இருக்கக்கூடிய இங்கிலாந்து மண்ணில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் வெற்றி பெறுவது கடினமாகும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இம்முறை இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வு காரணமாக விளையாடப் போவதில்லை. மறுபுறம் சுப்மன் கில் தம்முடைய கேரியரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்ததில்லை. அதனால் இம்முறையும் இங்கிலாந்து மண்ணில் இளம் இந்திய அணி வெற்றி பெறுவது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அனுபவம் இல்ல:

இந்நிலையில் இம்முறை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால் சுப்மன் கில் இங்கிலாந்தில் பொறுப்புடன் விளையாடுவார் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் மான்டி பனேசர் தெரிவித்துள்ளார். இருப்பினும் விராட், ரோஹித் ஓய்வு காரணமாக இந்திய அணியில் அனுபவமில்லை என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்து மண்ணில் அனுபவமே முக்கியமான பலமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இம்முறை இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியின் பேட்டிங் துறை சரிவுகளை சந்தித்து தோல்விக்கு வித்திடும் என்று அவர் கணித்துள்ளார். இது பற்றி பனேசர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் நல்ல கேப்டனாக இருப்பார் என்று நினைக்கிறேன். இம்முறை அவர் மிகவும் பொறுப்புடன் பேட்டிங் செய்வார் என்று நினைக்கிறேன். விராட், ரோஹித் ஆகியோர் விளையாடாத சூழ்நிலை இங்கிலாந்துக்கு பயனைக் கொடுக்கும்”

- Advertisement -

இந்தியா சரியும்:

“அவர்களுடைய அனுபவம் இந்தியாவுக்கு உதவி செய்திருக்கும். ஆனால் அவர்கள் இல்லாததால் தற்போதைய இந்திய அணி அனுபவமற்றதாகவே இருக்கிறது. அனுபவம் இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும்? இங்கிலாந்து மண்ணில் இந்தியா எப்படி விளையாடும்? போன்ற விஷயங்கள் கேள்விகளாகும். ஆனால் இங்கிலாந்து தங்களுடைய சொந்த ஊரில் எப்படி விளையாடும் என்பது நமக்குத் தெரியும்”

இதையும் படிங்க: 100 வருசத்துல 14 முறை.. இந்தியா தோற்பதற்காகவே இங்கிலாந்து வந்துருக்காங்க.. மைக்கேல் வாகன்

“அதனால் சரிவுகளை சந்திப்பதற்கு சாத்தியங்கள் இருக்கின்றன” என்று கூறினார். இருப்பினும் கடந்த ஆஸ்திரேலிய தொடரில் விராட், ரோஹித் போன்ற அனுபவ வீரர்களுடன் விளையாடி இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனாலேயே 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதனால் இம்முறை இளம் இந்திய அணி தன்னம்பிக்கையுடன் போராட தயாராக இருக்கிறது.

- Advertisement -